மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 283


 

கடிய       -       பொல்லாங்கான,        தீவினைகளெல்லாம் -
பாபவினைகளெல்லாம், கட்ட - பந்திக்க, தானும் - அம்மோகனீயமும்,
கட்டும் - சேர்ந்து பந்திக்கும், கெடுவழி - கெடுகின்றவழி, தான் கெடா
முன் - தான் கெடாததற்கு   முந்தி,  எந்த வினைக்கும் - மற்றெந்தக்
கர்மத்திற்கும்,   கேடு - கெடுகையை,   ஒட்டா  - செய்யவொட்டாது,
மோகம்   -  அப்படிப்பட்ட   மோகனீய  கர்மமானது, அடுதலுக்கு -
ஜெயித்தற்கு,    அரிய   -    மிகவுமருமையானது,    வினைகட்கு -
கர்மங்கட்கெல்லாம்,   அரசனாம் - ராஜாவாகும், என்றான் - என்றும்
சொன்னான், எ-று.                                       (55)

 616. மதியினா லார்வஞ் செற்ற மயக்கத்தான் வினைய வற்றாற்
     கதிகளுட் கழுமக் காய மாறிலொன் றாமக் காயம்
     பொதியவைம் பொறியை யாக்கும் பொறிகளாற் புலத்தை மேவி
     விதியினாம் வேட்கை செற்ற மீட்டுமச் சுழற்றி யாமே.

     (இ-ள்.)   (அவ்வாறு   சொல்லிப்   பின்னரும்),  மதியினால் -
அஞ்ஞானத்தாலும்,  ஆர்வம் - ராகமும்,  செற்றம் - த்வேஷமுமாகிய,
மயக்கத்தான்     -    மயக்கத்தினாலும்,  வினை   -  வகர்மங்கள்,
(ஆசிரவிக்கும்),      அவற்றால்   -    அவற்றினால்,  கதிகளுள் -
சதுர்கதிகளில்,  கழும - பொருந்த, காயமாறிலொன்றாம் - ஷட்ஜீவனி
காயங்களிலொன்றுண்டாகும்,  அக்காயம்   பொதிய - அப்படிப்பட்ட
காயம்   சேர,   ஐம்பொறியையாக்கும்    -    பஞ்சேந்திரியங்களை
யுண்டாக்கும்,  (அதாவது : மேற்கூறிய காயங்களில் ஒவ்வொன்றுக்கும்
ஏற்பட்டபடி  பஞ்சேந்திரியங்களில்   ஒன்றோ   இரண்டோ மூன்றோ
நான்கோ     ஐந்தோ    உண்டு     பண்ணும்),    பொறிகளால் -
அவ்விந்திரியங்களால்,  புலத்தை - விஷயங்களை, மேவி - பொருந்தி,
விதியின் - கிரமத்தால்,  வேட்கை - ராகமும், செற்றம் - த்வேஷமும்,
ஆம்   -   உண்டாகும்,  மீட்டும்   -    அதனால்     மறுபடியும்,
அச்சுழற்றியாம் - முன் சொன்ன சதுர்கதி சுழற்சியாகும், எ-று.    (56)

 617. பரியட்ட மிதனை வெல்வார் பான்மையார் பான்மை யில்லார்
     திரிவட்டம் போல நான்கு கதிகளுட் டிரிவ ரென்னக்
     கிரியட்ட விறைமை தன்னைக் கிரணவே கன்கண் வைத்துப்
     பொறியொக்கப் போகம் விட்டுப் புரவலன் முனிவனானான்.

     (இ-ள்.)   பான்மையார்  -  பவ்வியத்துவத்தை யடைந்தவர்கள்,
பரியட்ட   மிதனை  -  இந்தப்  பரிவர்த்தனாரூபத்தை,  வெல்வார் -
ஜெயித்து        ஸ்வரூபத்தையடைவார்கள்,     பான்மையில்லார் -
பவ்வியத்துவத்தை  யடையாதவர்கள், திரிவட்டம் போல - வட்டமாகச்
சுழலும்   இயந்திரத்தைப்போல,  நான்கு கதிகளுள் - சதுர் கதிகளில்,
திரிவர் - பிறந்து   மிறந்தும்  சுழலுவார்கள், என்ன - என்று சொல்ல,
கிரி - அவ்விஜயார்த்த   பர்வதத்தில்,  அட்ட  -  தன்னால் ஜெயித்த
சம்பாதித்த