இறைமைதன்னை - ராஜ்யத்தை, கிரணவேகன்கண்
வைத்து - தனது
குமாரனாகிய கிரணவேகன் பேரில் ஸ்தாபித்து,
பொறி -
இந்திரியங்கள், ஒக்க - ஒருங்குபட்டு அடங்க, போகம் - போகோப
போகங்களை, விட்டு -
விலகி அல்லது நீக்கி (அதாவது
விஷயஸம்யதனாகி), புரவலன் -
சூர்யாவர்த்த மஹாராஜன்,
முனிவனானான் - முனியாயினான் (அதாவது : ஜினதீக்ஷையைக்
கொண்டான்), எ-று.
(57)
618. எரிமுயங் கிலங்கும் வேலான் றுறந்தபி னிசோத ரையாஞ்
சுரிகுழற் கருங்கட் செவ்வாய்ச் சூரியா வருத்தன்
றேவி
சிரிதரை யோடுஞ் சென்று குணவதி பாதஞ் சேர்ந்து
வரிசையிற் றுறந்து மஞ்ஞை மயிருகுத் திருந்த வொத்தார்.
(இ-ள்.) (அவ்வாறு) எரி
- அக்கினியில், முயங்கு - சேர்ந்து
வடிவுபெற்று, இலங்கும் - விளங்கும்,
வேலான் -
வேலாயுதத்தையுடைய, சூரியாவருத்தன் - சூர்யாவர்த்தனென்னுமரசன்,
துறந்தபின் - பரிக்கிரகங்களை விட்டு தீக்ஷித்த பின், இசோதரையாம்
- யசோதரை யென்னும் பெயரையுடையவளாகிய, சுரி -
சுருண்ட,
குழல் - அளகத்தையும், கரும் - கருத்த, கண் -
கண்களையும்,
செவ்வாய் - சிவந்த வாயையுமுடைய, தேவி
- அவனுடைய
பட்டத்தரசியானவள், சிரிதரையோடும் -
தன் தாயாகிய
ஸ்ரீதரையோடும், சென்று - போய், குணவதி - குணவதியென்னும்
ஆர்யாங்கனையின், பாதம் - பாதத்தை, சேர்ந்து
- அடைந்து,
(பின்னர் அவ்விருவரும்), வரிசையில் - ஆகமோக்த வரிசையின்படி,
துறந்து - தீக்ஷித்து, மஞ்ஞை - ஆண்
மயிலானது, மயிர் -
கலாபத்தை, உகுத்து - உதிர்த்து விட்டு, இருந்தது
- இருந்ததை,
ஒத்தார் - நிகர்த்தார்கள், எ-று.
இதனால், அவர்கள்
தலைமயிரையும், ஆபரணாதி
பரிக்கிரகங்களையும் பரிகரித்து விட்டார்கள் என்பது பெறப்படும். (58)
619. அங்கபூ வாதி நூலு ளச்சியர்க் குரிய வோதி
வெங்கடுங் கானன் மேவல் வேறுபட் டுறைதல் விட்டுச்
சிங்கநற் பாய்ச்ச லாதி நோன்பொடு செறிந்து
செம்பொன்
வங்கமே யனைய தோள்கள் வற்றிமா சடைய நோற்றார்.
(இ-ள்.) (அவ்வாறாயபின்)
அங்கபூவாதிநூலுள் - அங்காகமம்
பூர்வாகமம் முதலிய
பரமாகமங்களில், அச்சியர்க்கு -
ஆரியாங்கனைகளுக்கு, உரிய - உரித்தானவைகளை, ஓதி - படித்து,
வெம் - வெவ்விய, கடும் - கடுமையாகிய, கானல் மேவல் - காட்டில்
ஆதபயோகம் தாங்குதல் முதலாகிய திரிகால
யோகங்களையும்,
வேறுபட்டுறைதல் - தனியாகத் தங்குதலாகிய
விவிக்தசய்யாஸன
முதலானவைகளையும், விட்டு - தங்களுக்கில்லாமல் விட்டு விலகி,
சிங்கநற்பாய்ச்சலாதி - ஸிம்ம |