மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 285


 

நிஷ்கிரீடித   முதலாகிய,   நோன்பொடு  -  மஹா நோன்புகளோடு,
செறிந்து - சேர்ந்தனுஷ்டித்து,  செம்பொன் -  சிவந்தபொன்னாலாகிய,
வங்கமே   யனைய  -  வழுதுணைக்குச் சமானமாகிய,  தோள்கள் -
கைகள்,   வற்றி - வாடி,  மாசடைய - திரையும்படியாக, நோற்றார் -
நோன்பை நோற்றார்கள், எ-று.                             (59)

 620. தவக்கொடி யிரண்டு போலத் தாங்கருங்கொள்கை தாங்கி
     வத்தல்காய் வின்றிச் சித்தத் தொத்துநின் றொழுகு நாளுள்
     நவைக்கெலா மிடமிப் போக மென்றுநற் கிரண வேகன்
     சிவத்திறை யுறையுஞ் சித்தா யதனநற் கூடஞ் சேர்ந்தான்.

    (இ-ள்.)  (இவர்கள்   இவ்வாறு  நோன்பு  நோற்று), தவக்கொடி
யிரண்டுபோல்   -   இரண்டு   தபக்கொடிகள்போல,   தாங்கரும் -
தாங்குதற்கரிதாகிய,  கொள்கை  -  சாரித்திரத்தை,  தாங்கி - தரித்து,
உவத்தல்  -  ஒரு  விஷயத்தில் ஸந்தோஷித்தலும்,  காய்வின்றி ஒரு
விஷயத்தில்   த்வேஷித்தலும்  இல்லாமல், சித்தத்து - மனதில், ஒத்து
நின்று - ஸமத்வீபாவத்தோடு கூடி நின்று, ஒழுகு நாளுள் - நடக்கின்ற
காலத்தில், இப்போகம் - இந்த  ஸம்சார போகமானது, நவைக்கெலாம்
- இன்பங்கட்கெல்லாம்,   இடம் என்று - இருப்பிடமென்று, (தர்மத்தை
யுணர்ந்து),   நல்  -  நன்மையான,  கிரணவேகன்   -   கிரணவேக
மகாராஜன், சிவத்திறை - மோட்ச நாயகனாகிய  ஜிநேஸ்வரப்பிரதிமை,
உறையும்     -   தங்குதல்    கொண்டிராநின்ற,    சித்தாயதனம் -
ஸித்தாயதனமென்னும்   பெயரையுடைய,  நல் - நன்மையாகிய, கூடம்
- (விஜயார்த்த   பர்வதத்தின்  கீழ்த்திசையில்  பிரதம சிகரத்திலுள்ள)
அக்கிருத்திமசைத்யாலயத்தை,     சேர்ந்தான்    -    அடைந்தான்,
எ-று.                                                  (60)

 621. ஐயைந்து காத மோங்கி யகன்றுநீண் டடியி னுச்சி
     யையைந்திற் பாதி நீள மகலமாஞ் சிகரந் தன்னைப்
     பையொன்றும் பரவை யல்குற் பட்டிகைச் சூட்டுப் போல
     மையொன்றி மலர்ந்த கண்ணார் வனப்பிற்கா விரண்டு சூழ்ந்த.

     (இ-ள்.)        ஐயைந்து      காதம்      -        (அந்த
அக்கிருத்திமஜிநசைத்யாலயமானது)   இருபத்தைந்து  காதம், ஓங்கி -
உன்னதமாகி,   அடியின் - கீழிடத்தில்,   அகன்று - முன்  சொன்ன
இருபத்தைந்துகாத    மகலமாகி   நீண்டு - அதே  நீளமாகி, உச்சி -
மேலே,  (நடுவிடம்)  ஐயைந்திற்பாதி - பன்னிரண்டரைக்காதம், நீளம்
- நீளமும்,  அகலம் - அகலமும், ஆம் - ஆகின்ற, சிகரந்தன்னை -
(அந்த    அக்கிருத்திமஜிநசைத்யாலயமுள்ள)   சிகரத்தினை,  பை -
சர்ப்பத்தினது   பணாமுடியை,  ஒன்றும்  -  ஒத்திராநின்ற, பரவை -
விசாலித்த,    அல்குல்    -   அல்குலினையுடையவரும்,    மை -
அஞ்சனமானது,   ஒன்றி - சேர்ந்து   அழகு  பொருந்தி, மலர்ந்த -
அகன்ற,   கண்ணார்   -    கண்களையுடையவருமாகிய   மாதரது,
பட்டிகைச்சூட்டுப்போல - மேகலாபரணம்