288மேருமந்தர புராணம்  


 

கிரணவேகன் - கிரணவேக மகாராஜன், நல் - நன்மையாகிய, கூடம் -
அச்சித்தாயதன   கூடத்தில்,   மால்   - ஸர்வஜ்ஞபிரதிமை, உறை -
இராநின்ற, இடம் - ஆலயத்தை, குறுகும் எல்லையுள் - மேற்கூறியபடி
அடைந்ததும்,   நீடியாது - காலம் நீட்டிக்காது சீக்கிரமாக, இழிந்து -
இறங்கி,  பின்  -  பின்பு,  நிலத்தின்மேல்  -  பூமியின்மேல், வரா -
நடந்துவந்து,   கோடு  -  சிகரங்களால்,   நீள் - நீண்ட, கோபுரம் -
வாசற்கோபுரத்தை,   கடந்து  -  தாண்டி,   கும்பிடா - உள்நுழைந்து
கையைக்குவித்துக் கும்பிட்டு, எ-று.                          (66)

 627. மலர்கையி னேந்திமா மேரு சூழ்வரு
     மலர்கதி 1ரருக்கனிற் கிரண வேகன்றான்
     பலமுறை வலம்வரப் பரமன் கோயிலு
     ணிலையுறு கதவங்க ணீங்கி நின்றவே.

     (இ-ள்.)  (மேற்கூறியபடி  கும்பிட்டபின்), மலர் - புஷ்பங்களை,
கையின்  -  கையிலே,   ஏந்தி  -  தரித்து,   மாமேரு - மஹாமேரு
பர்வதத்தை,   சூழ்வரும் - சூழ்ந்து பிரதட்சிணமாகச் சுற்றி வருகின்ற,
மலர்  -  விசாலித்த,    கதிர் - கிரணங்களையுடைய, அருக்கனில் -
சூர்யனைப்போல்,   கிரணவேகன்றான்   -   கிரணவேக மகாராஜன்,
பலமுறை  -  பலவாகிய மூன்று  முறை, வலம் வர - பிரதக்ஷிணமாக
வர,   பரமன் - அருக  பரமனுடைய, கோயிலுள் - ஆலயத்திற்குள்,
நிலையுறு   -   நிலை    பெற்ற, கதவங்கள் - கபாடங்கள், நீங்கி -
தாமே திறக்கப்பட்டு, நின்ற - நின்றன, எ-று.                 (67)

 628. கெடுகலங் கண்டவந் நாய்கன் கேளிர்போற்
     குடைமும்மை நீழளங் கோனைக் காண்டலு
     மடிமிசை யலர்சொரிந் தரற்றி யன்பினாற்
     படிமிசைக் களிறுபோற் பணிந்தெ ழுந்தனன்.

     (இ-ள்.)  (அவ்வாறுகபாடங்கள்  திறக்கப்பட்டதும்),  கெடுகலம்
- ஸமுத்திரத்தில்   காணாமல்   கெட்டுப்போன   கப்பலை, கண்ட -
மறுபடியும்   பார்த்த,   அந்நாய்கன்   -    அக்கப்பற்றலைவனாகிய
செட்டியினது,    கேளிர்போல் - சுற்றத்தாரைப் போல், குடைமும்மை
- சத்திரத்திரயத்தின்,   நீழல்  -  நிழலையுடைய, நங்கோனை - நமது
தலைவனாகிய   ஜினனது   பிரதிமையை,    காண்டலும்  -  பார்த்த
மாத்திரத்தில்,   (அக்கிரணவேகன்)   அடிமிசை - பாதங்களில், அலர்
- புஷ்பங்களை,    சொரிந்து   -   தூவி,    அரற்றி  -  ஸ்துதித்து,
அன்பினால் - பக்தியினால்,  படிமிசை - பூமியின் மேல், களிறுபோல்
- யானையைப்போல்,   பணிந்து  -  படிந்து வணங்கி, எழுந்தனன் -
எழுந்தான், எ-று.                                        (68)

____________________________________________

     1அருக்கனிலென்பது   பருதியில்  என்றும்   சில   பிரதிகளில்
காணப்படுகின்றது.