மத்தமால் களிறு செம்பொன்
மலையினை வலம்வந் தாற்போற்
றொத்தொளிர் மலர்க டூவிப் பலமுறை வலம்வந் திட்டான்.
(இ-ள்) பத்தொடு
- பத்து மாற்றொடுகூடி யுயர்ந்த, பைம் -
பசுமை பொருந்திய, பொன் - பொன்னினாலும், பதினாறாய - பதினாறு
குணங்கள் பொருந்திய, நல் - நன்மையாகிய,
மணியவற்றில் - இரத்தினங்களாலும், சித்திரத்து -
விசித்திரமாக, இயற்றப்பட்ட -
இழைத்துச் செய்யப்பட்ட, திருநிலையத்தை - ஸ்ரீநிலையத்தை, எய்தி -
அடைந்து, மத்த - மதம்பொருந்திய, மால் - பெரிய, களிறு - ஒரு
யானையானது, செம்பொன் மலையினை - மகம்மேரு பர்வதத்தை,
வலம் வந்தாற்போல் - வலமாக வந்ததுபோல்,
தொத்து -
கொத்துகளாகி, ஒளிர் - பிரகாசிக்கின்ற, மலர்கள் -
புஷ்பங்களை,
தூவி - சொரிந்து, பலமுறை - பலமுறைகள், வலம் வந்திட்டான் -
வலமாக வந்தான், எ-று. (62)
63. நிறைமதி கண்ட நீல மாக்கடல் போல நீடா
திறைவன துருவங் காணா வெழுதரு விசோதி தன்னாற்
சிறையழி புனலிற் செல்லுங் காதல னாகிச் சீர்சால்
துறவினுக் கிறைவன் றன்மேற் றுதிவகை தொடங்கி னானே.
(இ-ள்) நிறைமதி
- சம்பூர்ணச் சந்திரனை, கண்ட - பார்த்த,
நீலம் - நீல நிறமாகிற (ஜலத்தையுடைய), மா - பெரிய, கடல்போல -
சமுத்திரம்போல, நீடாது - சீக்கிரமாக, இறைவனது - பகவானுடைய,
உருவம் - ரூபத்தை, காணா - கண்டு, எழுதரு - அதனாலுண்டாகிய,
விசோதி தன்னால் - சுத்தபரிணாம மிகுதியால், சிறை - அணையை,
அழி - அழித்து, செல்லும் - செல்கின்ற, புனலிற் ஜலத்தைப்போல,
காதலனாகி - அடங்காத பக்தி விருப்பையுடையவனாகி,
சீர் -
சிறப்புகளினால், சால் - மிகுதியாகிய, துறவினுக்கு - துறவையுடைய
முனிகளுக்கெல்லாம், இறைவன்றன்மேல் -
நாயகனாகிய
சுவாமியின்பேரில், துதிவகை - தோத்திரங்களை, தொடங்கினான்
-
கூற ஆரம்பித்தான், எ-று.
துறவு - ஆகுபெயராய் அதனையுடையாரை
உணர்த்திற்று. (63)
வேறு.
64. பூமாலை முதலாய புனையாத திருமூர்த்தி
காமாதி வென்றுயர்ந்த கடவுளென் றறையுமே
காமாதி வென்றுயர்ந்த கடவுளென் றறைந்தாலுங்
கோமானின் றிருவுருவங் கொண்டுவப்பா ரரியரே.
(இ-ள்) பூமாலை முதலாய
- பூமாலை முதலானவைகளை,
புனையாத - அலங்காரமாக வணியாத, திருமூர்த்தி - அழகிய உமது
பரமௌதாரிக திவ்ய தேகமானது, காமாதி -
ஆசை முதலாகிய
குற்றங்களை (அதாவது விபாவங்களை), |