294மேருமந்தர புராணம்  


 

வம்,   பின்னமேவ,  அபின்னமேவ,    சூன்யமேவ   தத்துவமென்று)
பாவித்தால், மித்தம் - மித்தியாத்துவமாகும், எ-று.              (80)

நித்தியவாதம்

வேறு.

 641. நித்தமே தத்துவ மென்று நின்றவன்
     சித்தம்வைத் தப்பொரு டெரிந்து செப்புமே
     னித்தமே யென்றகோ ளழியு மன்றெனில்
     தத்துவந் தான்பெறற் பாடு மில்லையே.

     (இ-ள்.)   நித்தமே  -  ஸர்வதா  நித்தியமே, தத்துவமென்று -
தத்துவமாகுமென்று,  நின்றவன் - சொல்லி  அதன்வழியில் நின்றவன்,
சித்தம்வைத்து - மனம்வைத்து,  அப்பொருள் - ஸர்வதா  நித்யமாகிய
வப்பொருளை,   தெரிந்து - தெளிந்து, செப்புமேல் - சொல்லுமானால்,
நித்தமேயென்ற - ஸர்வதா நித்யமேயென்ற, கோள் - கொள்கையானது,
அழியும்   -  கெடும்,   (அதாவது :  ஸ்யாதனித்ய ஸ்வரூபமுமாகும்),
அன்றெனில்    -    அப்படி    ஒருவன்  மனம்வைத்துச்  சொல்ல
வேண்டுவதில்லை    நித்தியமேவதத்துவ  மென்றால், தத்துவந்தான் -
அவ்விதம்  ஸர்வதா நித்தியமாகிய தத்துவமான வதனை, பெறற்பாடு -
அதை   ஒருவன்   சொல்ல வேண்டியதும் அதனைக்கேட்டு அடைய
வேண்டியதும், இல்லை - கிடையாது, எ-று.                   (81)

 642. நிலையின தன்மையே தோற்றங் கேடிவை
     யிலையெனி லிறைவனு நூலு மில்லையால்
     நிலையிலா மாற்றது நீக்க மின்மையிற்
     றொலைவிலா வீட்டது தோற்ற மில்லையே.

     (இ-ள்.) நிலையின தன்மையே - (தத்துவம்) நித்தியஸ்வரூபமே,
தோற்றம்   -   உத்பாதமும்,   கேடு - வியமுமாகிய, இவை - இந்த
உத்பாதவ்யயங்களாகிய    அநித்தியகுணங்கள்,     இலையெனில் -
ஸர்வதா    இல்லையென்றும்     நித்தியமேவ     தத்துவமென்றும்
சொல்லுமிடத்தில்,  நிலையிலா - அநித்தியஸ்வரூபமாகிய, மாற்றுது -
ஸம்ஸாரத்தினது,     நீக்கமின்மையில்     -      நீக்கம்   முடிவு
இல்லையாகையால்,     தொலைவிலா  -  நீக்கமில்லாத,  வீட்டது -
மோக்ஷத்தினது,     தோற்றம்    -     தோற்றமானது,   இல்லை -
உண்டாவதில்லை,     (ஆகையால்),    இறைவனும் - (இவையறிந்து
சொல்லும்)    ஞானியாகிய    ஆப்தனும்,    நூலும்  -  அவனால்
தெரிவிக்கும்படியான பரமாகமும், இல்லை - இல்லாமற்போகும், எ-று.

    ஸர்வதா நித்யமேவதத்துவமானால், ஆப்தேஷ்டம் ஆகமேஷ்டம்
ஸம்சாரேஷ்டம்   மோக்ஷேஷ்டங்கள்  ஸம்பவியாவென்பது இதனால்
பெறப்படும்.                                            (82)