மொன்பதி னோடுமா
றெய்த வும்பொரு
ணின்றதே யென்பவர் நிற்க நிற்கவே.
(இ-ள்.) தன்சொல்
மாறாகி - ஸர்வதாநித்தியமே பேசுமிடத்தில்
அப்படிப் பேசப்பட்டவனது வசனமே விரோதமாகி, மேற்கோள்
-
அதன்மேலெடுத்துச் சொல்லும் திருஷ்டாந்த
பூதமாகிய
மேற்கொள்கைகளும், அழிந்து - கெட்டு, அதன்பின் - அதன்பிறகு,
பிறன்கோள்பிடித்து - பிறனுடைய கொள்கையைப் பிடித்துண்டாகிய,
இட்டதிட்டமா மொன்பதினோடும் -
இஷ்டம் ஆறு திருஷ்டம்
மூன்றுமாகிய இந்த ஒன்பதினோடும்,
மாறெய்தவும் -
மாறுபாட்டையடையவும், பொருள் -
பொருளானது,
நின்றதேயென்பவர் - ஸர்வதா நித்யமேவவென்று சொல்பவர், நிற்க
நிற்க - அவ்வழியிலே தெளியாமல் நிற்கக்கடவர், எ-று. (85)
அநித்தியவாதம்
வேறு.
646. அனித்தமே தத்துவ மென்னு மாத்தனும்
நினைப்பும் வாசக மும்பொரு ளும்வினா
வனைத்து மக்கணத் தொட்டறக் கெட்டபின்
னெனைத்துமில் லென்பதெத் தைக்கொண் டெத்தையோ.
(இ-ள்.) அனித்தமே
- ஸர்வதா அனித்தியமேவ, தத்துவம் -
தத்துவமாகும், என்னும் - என்று சொல்லும், ஆத்தனும் - முக்கியத்தை
யுடையவனும், நினைப்பும் - அத்தத்துவத்தை
நினைக்கின்ற
ஆலோசனையாகிற தியானமும், வாசகமும் - அப்படி
ஸர்வதா
அனித்தியமாகிய அத்தத்துவத்தை மொழிதலும், பொருளும் - அப்படி
ஸர்வதா அனித்தியமாகிய வஸ்துவும், வினா - அதை
யொருவன்
கேட்கின்றதுமாகிய, அனைத்தும் - இந்நான்கும், அக்கணத்து - அந்த
சமயத்திலேயே (அதாவது : தத்க்ஷணத்தில்),
ஒட்டற - பற்றற,
(அதாவது : முழுதிலும்), கெட்டபின் -
அத்தத்துவப் பிரகாரம்
நாசமானபின், எனைத்தும் - யாதொன்றும், இல்லென்பது - ஸர்வதா
இல்லையென்பது, எத்தைக்கொண்டு - எந்தவசனத்தைக் கொண்டு,
எத்தை - எந்தப்பொருளை, எ-று.
ஸர்வதா அனித்தியம்
சாதித்தால் ஒன்றுமில்லை யாகையால்
அப்படிச் சாதிப்பதே பிரத்தியக்ஷ விரோதமென்பது
இதன்
தாத்பரியம். (86)
647. கணங்க ணந்தொறும் தோற்றமும் கேடுமாய்த்
தணந்த தேதத்து வம்நிலை யில்லெனிற்
கணங்க ணந்தொறுங் கெட்டவன் கேட்டினை
யுணர்ந்து சொல்லுமோ வில்லையோ வுண்டெனில். |