வென்று - ஜெயித்து, உயர்ந்த - ஸ்வாபவ குணங்களாலுயர்ந்த,
கடவுள்
என்று - பகவான் என்று,
அறையும் - தெரிவிக்கும்,
காமாதிவென்றுயர்ந்த - இராகாதிகளை
வென்று உயர்ந்த
நிலைமையுடைய, கடவுளென்றறைந்தாலும் - கடவுள் இவர்தாம் என்று
அங்ஙனம் தெரிவித்தாலும், கோமான் - கோமானே, நின் - உனது,
1திருவுருவம் - அழகிய ரூபத்தை, கொண்டு
- மனத்துக்கொண்டு,
உவப்பார் - சந்தோஷித்துச் செல்கின்றவர்கள், அரியர் - அருமையா
யிராநின்றார்கள், எ-று.
இதனால் ரூபஸ்தவம் சொல்லப்பட்டது.
(64)
65. விளக்ககத்துப் பளிங்கேபோல் விரிந்தொளிமூன் றுடைமேனி
யளப்பரிய யொளியகத்துள் ளிருப்பதென் றறையுமே
யளப்பரிய வொளியகத்துள் ளிருப்பதென் றறைந்தாலுந்
துளக்கறவென் றுயர்ந்தோயைத் தொழுதெழுவா ரரியரே.
(இ-ள்) விளக்கு
- தீபத்தை, அகத்து - உள்ளே உடைய,
பளிங்கேபோல் - ஸ்படிகத்தைப்போல், விரிந்து - விசாலித்து,
ஒளி
மூன்றுடை - (மனோஜோதி, வாக்ஜோதி, காயஜோதி என்னும்) மூன்று
ஜோதிகளையுடைய, மேனி - (உமது) பரம ஒளதாரிக
திவ்விய
சரீரமானது, அளப்பரிய - (பிறர்களால்) அளவிடுதற்கரியதாகிய, ஒளி -
பிரகாசமானது, அகத்துள் - தனக்குள்ளே,
இருப்பதென்று -
இருக்கிறதென்று, அறையும் - தெரிவியாநின்றது, அளப்பரியவொளி -
மிகுதியான ஒளி, அகத்துள்ளிருப்ப
தென்றறைந்தாலும் -
தன்னுக்குள்ளே இருக்கிறதென்று தெரிவித்தாலும்,
துளக்கற -
சலனமின்றி, வென்று - விபாவங்களைக்கெடுத்து, உயர்ந்தோயை
-
ஸ்வபாவகுணத்தால் உயர்ந்த உன்னை, தொழுதெழுவார் - வணங்கிச்
செல்பவர்கள், அரியர் - அருமையா யிராநின்றார்கள், எ-று.
இதனால் வஸ்து ஸ்தவம் சொல்லப்பட்டது.
(65)
66. அமலமா யருள்சுரந்திட் டறிவரிய திருமூர்த்தி
விமலமாய்விரிந்தநாற் குணத்தலைமை விரிக்குமே
விமலமாய் விரிந்தநாற் குணத்தலைமை விரித்தாலுங்
கமலமீ துலவுமுனைக் காதலிப்பா ரரியரே.
(இ-ள்) அமலமாய்
- நிர்மலமாகி (அதாவது விபாவமின்றி),
அருள்சுரந்திட்டு - தயவை சகலப்
பிராணிகளிடத்திலும்
அதிகரிக்கச்செய்து, அறிவரிய -
பிறர்களாலறிதற்கரியதாகிய,
திருமூர்த்தி - அழகிய பரமௌதாரிக திவ்விய தேகமானது, விமலமாய்
- குற்றமின்றி, விரிந்த - தன்னுக்குள் விசாலித்த, நாற்குணத்தலைமை -
(அனந்த ஞான, தர்சன, சுக, வீர்யமென்னும்) நான்கு குணங்களின்
முதன்மையை, விரிக்கும் - விசாலித்துத் தெரிவிக்கும்,
விமலமாய்
விரிந்த - அப்
___________________________________________
1திருவுருவம் - நிர்க்கந்தரூபம், அதாவது : பரிக்கிரகாஹிதரூபம்.
|