படிக் குற்றமின்றி விசாலித்த, நாற்குணத் தலைமை - அனந்த
சதுஷ்டய குண முதன்மையை, விரித்தாலும் - தெரிவித்தாலும்,
கமலமீது - செந்தாமரைப் பூவின் மேலே, உலவும் - 1ஸ்ரீ விஹாரம்
செய்யும், உனை - உன்னை, காதலிப்பார் - விரும்பி பக்தி
பண்ணக்கூடியவர்கள், அரியர் - அருமையா யிரா நின்றார்கள், எ-று.
இதனால் குணஸ்தவம் சொல்லப்பட்டது. (66)
தத்துவங் கேட்டல்.
வேறு.
67. என்றுறின் நிறைவனை யேத்தி மாதவத்
தொன்றிய மனத்தனா யுலக நாதனை
நின்றதத் துவத்தது நீர்மை யென்னெனக்
குன்றனாற் கருளினான் குற்ற மற்றகோன்.
(இ-ள்) என்று - என்று கூறி, நின்று - அபிமுகத்தில் நின்று,
இறைவனை - ஸ்வாமியை, ஏத்தி - ஸ்தோத்திரம்பண்ணி, மாதவத்து -
உத்க்ருஷ்டமாகிய தபசிலே, ஒன்றிய - பொருந்திய, மனத்தனாய் -
மனதை யுடையவனாகி, உலக நாதனை - மூன்று லோகத்திற்கும்
நாதனாகிய அந்த ஸ்வாமியை, நின்ற - உலகத்தில் நிலைபெற்றிரா
நின்ற, தத்துவத்தது - ஜீவாதி பதார்த்தங்களினது, நீர்மை - குணங்கள்,
என்னென - எப்படிப்பட்டவை யென்று கேட்க, குன்றனாற்கு -
பர்வதம்போல் சலியாத குணத்தையுடைய வைசயந்த மகாராஜனுக்கு,
குற்றமற்ற கோன் - ராகத்வேஷ மோகங்களில்லாத ஸ்வயம்பு நாம
தீர்த்தங்கரர், அருளினான் - அவற்றின் விவரங்களைக் கூறியருளினார்,
எ-று. (67)
வேறு.
68. உயிரும்முயி ரல்லதும் புண்ணியம் பாவமூற்றுஞ்
செயிர்தீர் செறிப்பு முதிர்ப்புங் கட்டும் வீடுமுற்ற
துயர்தீர்க்குந் தூய நெறியுஞ்சுருக் காயு ரைப்பன்
மயறீர்ந்த காட்சி யுடையோயிது கேண் மதித்தே.
(இ-ள்) மயல் - மயக்கத்தினின்றும், தீர்ந்த - நீங்கிய (அதாவது :
தெளிந்த), காட்சி - சம்மியந்தர்சனத்தை, உடையோய் - உடைய
வைசயந்த மகாராஜனே, உயிரும் - ஜீவபதார்த்தமும், உயிரல்லதும் -
அஜீவபதார்த்தமும், புண்ணியம் - புண்ணிய பதார்த்தமும், பாவம் -
பாவ பதார்த்தமும், ஊற்றும்-
_________________________________________________
1ஸ்ரீ : விஹாரம் செய்தல் - செல்லுதல். |