32மேருமந்தர புராணம்  


 

ஆஸ்ரவ  பதார்த்தமும்,  செயிர்தீர்  - குற்றம்  நீங்கிய,  செறிப்பும் -
சம்வர  பதார்த்தமும்,  உதிர்ப்பும் - நிர்ஜரை  பதார்த்தமும், கட்டும் -
பந்த  பதார்த்தமும்,  வீடும் -  மோக்ஷபதார்த்தமும்,  உற்ற - சம்சார
ஜீவன்களிடம் பொருந்திய, துயர் - துக்கங்களை,  தீர்க்கும் - கெடுத்து
மோக்ஷமடைவிக்கும்,  தூய  -  பரிசுத்தமாகிய, நெறியும் - இரத்தினத்
திரயமாகிற   மார்க்கத்தையும்,   சுருக்காய்  -   லகுவாக  (அல்லது
சுருக்கமாக),  உரைப்பன்  -  சொல்லுவேன்,  இது  - (இந்த  ஜீவாதி
நவ  பதார்த்தங்களைப்பற்றிக்  கூறும்)  இதனை,  மதித்து - உயர்வாக
எண்ணி, கேள் - கேட்பாயாக, எ-று.                        (68)

வேறு.

 69. அறிவு காட்சிய தாயைந்து மூன்றுமம்
    பொறியோ டுட்கர ணத்துயிர்ப் பாயுவிந்
    நெறியின் வாழும் பொருளது சீவனா
    மறியின் வீட்டது மாற்றது மாகுமே.

     (இ-ள்) அறிவு - ஞானமும்,  காட்சியது - தர்சனமும்,  ஆய் -
ஸ்வபாவமாகி,  ஐந்து  பொறியோடு  -  பஞ்ச   இந்திரியங்களோடும்,
மூன்று  -  மூன்றாகிய,  உட்கரணத்து  -  அந்தக் கரணங்களோடும்,
உயிர்ப்பு - உச்சுவாஸ நிச்சு வாஸமும், ஆயு - ஆயுஷ்யமும் (ஆகிய),
அம் - அழய,  இந்நெறியின் - இந்த தசப் பிராணன்களில்  (வரிசைக்
கிரமத்தால்), வாழும் - வாழ்ந்த வாழ்கின்ற வாழும்படியான, பொருளது
-  பொருளானது,   சீவனாம்   -   ஜீவனாகும்,  அறியின்  -  அந்த
ஜீவன்களையறியுமிடத்தில்,   வீட்டது   -  மோட்ச ஜீவன்களென்றும்,
மாற்றதும்  -  ஸம்ஸார  ஜீவன்களென்றும், ஆகும் - இருவகையாகும்,
எ-று.

     ஸ்வபாவ  ஞாநதர்சனம் பெற்ற  ஜீவன்கள்  மோட்ச ஜீவன்கள்;
விபாவ   ஞானதர்சனத்தால்    பௌத்கலிகமான    தசப்பிராணாதார
ஜீவன்கள்  ஸம்ஸார   ஜீவன்கள்;  இவைகளின்   விவரங்கள்  மேல்
2-பாடல்களில் சொல்லப்படும்.

     தசப்பிராண வரிசைகள் :- ஏகேந்திரிய  ஜீவனுக்கு - ஸ்பரிசன
இந்திரியம், காயவந்தக்கரணம்  -  உச்வாஸம்,  ஆயுஷியம்  என்னும்
நாலு    பிராணன்கள்;    த்வீந்திரிய   ஜீவனுக்கு   -   இவற்றோடு
ரஸனேந்திரியம், வாக்வந்தக்  கரணம்  சேர்ந்து,  ஆறு பிராணன்கள்;
திரி இந்திரிய ஜீவனுக்கு க்ராண இந்திரியம் சேர்ந்து ஏழுபிராணன்கள்;
சதுர்   இந்திரிய   ஜீவனுக்கு  -  சக்ஷுசேர்ந்து  எட்டுப்பிராணன்கள்;
அஸஜ்ஞி   பஞ்சேந்திரிய   ஜீவனுக்கு   -   காதுசேர்ந்து   ஒன்பது
பிராணன்கள்;  ஸஜ்ஞிபஞ்சேந்திரிய  ஜீவனுக்கு - மனோவந்தக்கரணம்
சேர்ந்து பத்துப் பிராணன்களாகும். இவையெல்லாம் பதார்த்தஸாரத்தில்
தசப்பிராணாதிகாரத்திலும்,     இந்திரியமார்க்கணாதி     காரத்திலும்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.                        (69)