330மேருமந்தர புராணம்  


 

தெலாம்   -    (ஆத்மஸ்வபாவ    குணத்தையாக      வொட்டாத)
குற்றங்களையெல்லாம், செய்யவல்ல - செய்யும்படியான, மிச்சத்தப்பகடி
தன்னை   -  மித்தியாத்துவப் பிரகிருதியை, அழிய - கெட, சார்ந்த -
(முன்சொன்ன   ஸ்திதி  நிலைமையில்) சார்ந்த, அந்தக் கோடாகோடி
மேலந்த   மூழ்த்த   மொழிய - அந்தக் கோடாகோடி மேல் அந்தர்
முகூர்த்தம் நீங்கலாக   (அதாவது : அவ்வளவு ஸ்திதியிருக்க),  மேல்
நிதியை    -    அதற்கு     மேல்பட்ட      மத்தியமோத்கிருஷ்ட
ஸ்திதிகளையெல்லாம், சோதி - விசோதி லப்தியானது, சாம்வண்ணம் -
கெடும்,   விதமாக,   ஒருங்கு   -   ஒருமிக்க - வீழ்க்கும் - நீக்கும்,
எ-று.                                                 (152)

 713. நின்றகீட் டிதியைக் கண்டங் கணந்தொறு நெறியிற் செய்யா
     பந்தமு நாற்பத் தோரு பகடிகட் கொழித்த போழ்தே
     வந்துடன் கட்டுந் தீய நல்வினைத் திதி சுருக்கா
     வந்தமூழ்த் தஞ்சென் றந்த விசோதிய தகன்ற பின்னை.

     (இ-ள்.)  நின்ற   -  இப்படியாகி நின்ற, கீழ்திதியை - குறைந்த
ஸ்திதியை,   கண்டம்  -  கண்டங்   கண்டங்களாக, கணந்தொறும் -
ஸமயம் பிரதிஸமயம்,   நெறியில் - கிரமத்தினால், செய்யா  - செய்து,
நாற்பத்தோரு   பகடிகட்கு   -   மித்தியாத்துவாதி    நாற்பத்தொரு
பிரகிருதிகளுக்கு,   பந்தமும்   - பந்தகாரண பரிணாமமும், ஒழித்த -
நீக்கின,   போழ்து  -  அப்பொழுது, வந்து - ஆத்ம பரிணாமத்தால்
வந்து,    உடன்  - ஆத்மனுடனே, கட்டும் - பந்திக்கும்படியான, தீய
நல்வினை   -   சேக்ஷ பாபபுண்ணிய வினைகளின், திதி - ஸ்திதியை,
சுருக்கா   -   குறைத்து,   அந்த   மூழ்த்தம் சென்று - ஒரு அந்தர்
முகூர்த்த காலம் சென்று, அந்த விசோதியது  - தேசனாலப்தியென்கிற
அந்தப் பரிணாமமானது, அகன்ற பின்னை - நீங்கின பிறகு, எ-று.

     நாற்பத்தாறு பகடிகட்கென்றும் சில பிரதிகளில் பாடபேதமுண்டு.
இந்தப்   பிரகிருதிகளின்   விவரம்,   ஸுகபோதை, பதார்த்த ஸாரம்,
கோம்மடஸாரம் ஆகியவற்றில், சொல்லப்பட்டிருக்கிறது.

நாற்பத்தொரு பிரகிருதிகளின் நாமங்களாவன :    

1. மித்தியாத்துவம்   8. த்ரீந்திரியஜாதி  13. ஸ்தாவரம்
2. நபும்ஸகவேதம்    9. சதுரிந்திரியஜாதி 14. ஸுக்ஷ்மம்
3. நரகாயுஷ்யம்    10. ஹுண்டஸம்ஸ்தா  15. அபர்யாப்தகம்
4. நரககதி             னம்      16. சாதாரணசரீரம்
5. நரக கத்யானு பூர்வி 11. அஸம்பிராப்தஸ்ரபா  17. நித்திராநித்திரை
6. ஏகேந்திரியஜாதி      டிகாஸம்ஹனனம்   18. பிரசலாப்ரசலை
7. த்வீந்திரியஜாதி    12. ஆதபம்     19. ஸ்த்யானக்கிரந்தி