கம் - அந்த வேதக சம்மியக்துவமானது,
முன் - முன்னால்
சொல்லப்பட்ட, ஏழை - ஸப்த பிரகிருதிகளை,
காத - கெடுக்க,
(அப்போது), காட்சி - தரிசனமானது, காயிகமதாம் - க்ஷாயிகமாகும்,
(அதாவது : க்ஷாயிக ஸம்மியக்துவமென்று சொல்லப்படும்), எ-று.
க்ஷாயிக ஸம்மியக்துவமானது,
க்ஷாயிக ஸம்யக்தரிசனமென்றும்
சொல்லப்படும்; அந்நிலைமையடைந்தவன்
க்ஷாயிக
ஸம்மியக்திருஷ்டியாவன்.
ஓர் - அசை. (163)
இப்படி உபசம, வேதக, க்ஷாயிக ஸம்மியக்துவமென்னும்
மூன்றுவிதமான ஸம்மியக்துவ நிலைமைகள், நாலாங்குண ஸ்தான
முதல் இன்னவிதமாக வர்த்திக்குமென்னும் விவரம்
இனிச் சொல்லப்படுகின்றது.
724. அடக்கமி லானை யாதி நால்வர்க்கு மூன்று மாகு
முடைத்திடா துவச மிப்பார் நால்வருக் குபச மித்தாங்
கெடுத்தவ ரறுவர்க் காகிற் கேட்டின்க ணாய தாகுந்
தடக்கைமா வேந்தே யென்றான் றத்துவத் தவத்து வேந்தன்.
(இ-ள்.) தத்துவம்
- ஜீவாதிதத்துவ ஸ்வரூபங்களையறிந்த,
தவத்து - மிகுதியான தபோ மாஹாத்மியத்தையுடைய, வேந்தன்
-
முனிவர்களுக்குள் ஸ்ரீரீஷ்டனாகிய அரிச்சந்திர மஹாமுனிவன்,
தடக்கை - பெரிய துதிக்கையையுடைய,
மா - யானைக்குத்
தலைவனாகிய, வேந்தே -
கிரணவேக மகாராஜனே!,
அடக்கமிலானையாதி - அஸம்மியத ஸம்மியக்திருஷ்டி குணஸ்தானன்
முதலாக, நால்வர்க்கு - நாலுபேர்களுக்கு (அதாவது : அஸம்யதன்,
தேசசம்யதன், பிரமத்தன், அப்பிரமத்தன்என்கிற
நாலு
குணஸ்தானவர்த்திகளுக்கு), மூன்றும் ஆகும் - (உபசமஸம்மியக்துவம்,
வேதக ஸம்மியக்துவம், க்ஷாயிகஸம்மியக்துவம், என்கிற) மூன்றுமாகும்,
(அதாவது : இந்த மூன்றிலும் எதானாலுமாகும்), உடைத்திடாது
-
கருமங்களைக் கெடுக்காமல்,
உவசமிப்பார் - உபசம
ஸ்ரீணியிலேறுபவர்கள், நால்வருக்கு -
(அபூர்வ கரண,
அநிவிருத்திகரண, ஸூக்ஷ்மஸாம்பராய, உபசாந்தகஷாய, என) நான்கு
குணஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு,
உபசமித்தாம் -
உபசமஸம்மியக்துவ மொன்றேயாகும், கெடுத்தவர் அறுவர்க்காகில் -
க்ஷபகஸ்ரீணியிலேறிக் கருமங்களைக் கெடுத்தவர்களாகிய
ஆறுபேர்களுக்காகில் (அதாவது : அபூர்வகரண, அநிவிருத்திகரண,
ஸூக்ஷ்மஸாம்பராய, க்ஷீணகஷாய, ஸயோகிகேவலி, அயோகிகேவலி,
என்னும் ஆறு குணஸ்தானவர்த்திகளுக்காகில்), கேட்டின் கண்ணாயது
- கர்மஷ பணத்தினாலாகிய க்ஷாயிக ஸம்மியக்துவமொன்றே, ஆகும் -
ஆம், என்றான் - என்று சொன்னான், எ-று. |