எனவே முதல் மூன்று
குணஸ்தானத்தில் ஸம்மியக்துவமில்லை
யென்பதாயிற்று. இதுவன்றியும் ஸம்மியக்துவம் இந்த மூன்று
பிரகாரமல்லாமல் பத்துப் பிரகாரமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
அதன் விவரம் பதார்த்தசாரத்தில் ஸம்மியக்துவமார்க்கணை யென்னும்
அதிகாரத்தில் பார்த்துக் கொள்ளலாம். அடக்க மிலானை யென்பதில்
ஐ - சாரியை. (164)
725. காட்சியு மறிவு மின்ன கதிர்ப்பவைம் பொறியும் வென்று
பூட்சிசா லொழுக்கந் தாங்கிப் புரிந்தெழு தியான
வாளால்
வேட்கைவே ரறுத்துக் காதி வினைகளை வென்ற போழ்தி
லாட்சிமூ வுலக மாகு மரசமற் றறிமோ வென்றான்.
(இ-ள்.) (மேலும்) காட்சியும்
- தரிசனமும், அறிவும் - ஞானமும்,
இன்ன - இப்பேர்ப்பட்டனவாய் (அதாவது : இப்போது
சொன்ன
பிரகாரம்), கதிர்ப்ப -
பிரகாசிக்க, ஐம்பொறியும் -
பஞ்சேந்திரியங்களையும், வென்று -
விஷயங்களில் செல்ல
வொட்டாமல் தடுத்து ஜெயித்து, பூட்சி - பொருந்தும்படியான, சால் -
மிகுதியாகிய, ஒழுக்கம் - ஸச்சாரித்திரத்தை, தாங்கி தரித்து, புரிந்து -
விரும்பி, எழும் - உண்டாகின்ற, தியானவாளால்
- தர்மத்தியான
சுக்கிலத்தியானமாகி வாளாயுதத்தினால், வேட்கை - ஆசையாகிற,
வேர் - சம்சார மூலத்தை, அறுத்து - சேதித்து, காதிவினைகளை -
(ஆத்மகுண காதங்களான) காதிகருமங்களை, வென்றபோழ்தில்
-
ஜெயித்த காலத்தில், மூவுலகும் -
இந்த மூன்று லோகமும்,
ஆட்சியாகும் - தன் ஆள்கைக்குட்பட்டு
வசமாகும், அரச -
கிரணவேக மகாராஜனே!, அறிமோ - அறிவாயாக,
என்றான் -
என்றும் முனிவரன் கூறினான், எ-று.
மூவுலகும் தன்
வசமாகுமென்றதனால் தனது குணத்தைக்
கெடுக்க வுலகில் எவையாலும் ஆகாதென்பதும், அதனால் அனந்த
ஸுகமாயிற்றென்பதும் பெறப்படும்.
(165)
726. மாதவன் மலர்ந்த வாய்மை மணிவிளக் கெறிப்ப மைய
லாதியா மந்த கார மகன்றதன் னறிவு காட்சி
யோதிய வகையிற றோன்ற வுலப்பிலாப் பொருளைக் கண்டா
னேதமொன் றிலாமைக் கேது வியற்றுவ னென்று சொன்னான்.
(இ-ள்.) (அவ்வாறு கூறிய
பின்பு) மாதவன் - உத்கிருஷ்டமான
தவத்தையுடைய முனிவன், மலர்ந்த - வாய்மலர்ந்து கூறிய, வாய்மை -
உண்மை ஸ்வரூபமாகிய, மணிவிளக்கு - இரத்தின தீபமானது, எறிப்ப
- பிரகாசிப்ப, ஸமயலாதியாம் - மித்தியாத்துவம்
முதலாகிய,
அந்தகாரம் - இருளானவை, அகன்ற -
நீங்கின, (அப்போது),
தன்னறிவு - தனது ஸ்வரூமாகிய ஸம்மியக் |