விலை - விலையுயர்ந்த, பட்டும் - பட்டு வஸ்திரங்களும்,
அரசனால் -
ஒரு ராஜாவினால், முனியப்பட்ட - கோபிக்கப்பட்ட, பரிசனம்போல -
அவனது பரிசனங்களைப்போல, சாயையிழந்து - மேன்மை குறைந்து,
போய் - நீங்கி, வீழ்ந்த - வீழ்ந்தன, எ . று.
அன்றே - ஈற்றசை. (172)
733. குந்தள மாகி நீலங் குழன்றெழுந் தனைய குஞ்சி
மந்திரப் பதங்கள் சொல்லி வண்கையால் வாங்கு மெல்லை
யந்தரக் கரணஞ் சிந்தைக் கவ்வழி யுழைய தாக
விந்தியஞ் சிறகு வீழ்ந்த பறவைபோ லெழுந்த வேகம்.
(இ-ள்.) (மேலும் அவ்வரசன்),
நீலம் - நீலநிறமே, குந்தளமாகி -
மயிர்த்திரளாகி, குழன்று - குழற்சியையடைந்து,
எழுந்தனைய -
வளர்ந்து மிகுதியான தற் கொப்பாகிய,
குஞ்சி - தலையின்
ரோமங்களை, மந்திரப்பதங்கள் - மூலமந்திரப் பதங்களை, சொல்லி -
உச்சரித்து, வண்கையால் -
ஈகைவளம் பொருந்திய கையின்
பலத்தினால், வாங்குமெல்லை - லோச்சை
செய்கிற காலத்தில்,
(அவனிடத்தே), அந்தரக்கரணம் - (கரணலப்பதியானது பூர்த்தியாகிற
அந்திய பாகத்துண்டாகும்) அந்தக் கரணபரிணாம நிலைமையானது,
சிந்தைக்கு - சிந்தையில், அவ்வழியுழையதாக - அத்தியானத்தின்
வழியிடத்ததாக, (சேர்ந்து நிற்ப), இந்தியம்
- இந்திரியங்களின்,
வேகம் - விஷய வேகங்கள், சிறகு
வீழ்ந்த - இறகொடிந்த,
பறவைபோல் - பட்சியைப்போல், எழுந்த - உண்டாயின, (அதாவது :
அடங்கின), எ-று.
இங்ஙனம் கூறியதனால்
இந்திரிய விஷயங்களைத் தடை
செய்தலாகிய விஷய ஸம்யமம் மிகவும்
அடைந்ததென்பது
பெறப்படும்.
(173)
734. தண்டினைக் கோபித் தாற்றித் தருமத்தின் வழிய னாகி
விண்டங்கா ரவங்கள் வெய்ய பரிசையை வென்று வீரன்
முண்டமீ ரைந்தோ டொன்றி முனிமையிற் றனிய னாகித்
தண்டுளி முகிலிற் செல்லுஞ் சாரணத் தன்மை பெற்றான்.
(இ-ள்.) (அவ்வாறடைந்தபின்),
தண்டினை - (மனோதண்டம்,
வாக்தண்டம், காயதண்டமென்னுந்) திரி தண்டங்களை, கோபித்து
-
விரோதித்து நீக்கி, ஆற்றி - ஆத்மபாவனையைச் செய்து, தருமத்தின்
- தசதர்மத்தின், வழியனாகி - வழியானவனாகி,
காரவங்கள் -
(ரஸகாரவம், ஸாதுகாரவம், ரித்திகாரவம் என்கிற) திரி காரவங்களை,
விண்டு - விட்டு, வெய்ய - கடுமையான, பரிசையை
- க்ஷுதாதி
த்வாவிம்சதிபரீஷஹங்களை, வென்று -
ஜெயித்து, வீரன் -
வீரபுருஷனாகிய கிரண
|