மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 343


 

வாய்மேல் நடப்பதற்குச் சமமாகிய, கொள்கை - சாரித்திரத்தையுடைய,
சிரிதரையோடு - ஸ்ரீதரை யென்னும்  ஆரியாங்கனையோடும், செம் -
சிவந்த,    பொன்     -    ஸ்வர்ணபாஷாணங்கள்,    விரிகின்ற -
மிகுந்திருக்கின்ற,  குகையின் - அக்காஞ்சனக்குகையில், (இருக்கின்ற),
மெய்த்தவன்   தன்னை - உண்மையாகிய தபஸையுடைய கிரணவேக
முனிவனை,    (கண்டு),  பாடம் - துதிப்பாடல்களைப் படித்தலினால்,
வாழ்த்தி   -    ஸ்தோத்திரஞ்    செய்து,   இரிகின்ற - நீங்குகின்ற,
வினையராகி    -    பாபகருமங்களையுடையவராகி (அதாவது : சுப
பரிணாமமுடையவர்களாகி),    இறைவன்பால்  - அம்முனிசிரேஷ்டன்
சமீபத்தில், இருந்த காலை - இருந்தபொழுது, எ-று.           (176)

 737. விதியினாற் கதிக ணான்கின் மேவிநின் றார்க டம்முண்
     மதியினாற் பெரிய நீரார் மக்களாய் வந்து தோன்றி
     விதியினாற் றானம் பூசை மெய்த்தவஞ்செய்து வீட்டைக்
     கதிகளைக் கடந்து செல்வார் காரிகை யார்கள் செல்லார்.

     (இ-ள்.)  (அம்முனிவரன்  அவர்களை  நோக்கி), விதியினால் -
சுபாசுப   பரிணாமத்தாலாகிய   கருமத்தினுடைய  விதிப்படி, கதிகள்
நான்கில்    -   சதுர்க்கதிகளில்,  மேவி     நின்றார்கள் தம்முள் -
பொருந்திநின்ற   ஸம்ஸார   ஜீவன்களில், மதியினால் - புத்தியினால்
(அதாவது :   மதிஜ்ஞான   பலத்தால்), பெரிய - பெரிதாகிய, நீரார் -
குணத்தையுடையவர்கள்,    மக்களாய்    வந்து    தோன்றி - வந்து
மனிதர்களாகப்      பிறந்து, (அவர்களுள் புருஷர்களாயிருப்பவர்கள்),
விதியினால்  - கிரமத்தினால்,  தானம் - ஸத்பாத்திரங்களில் செய்யும்
ஆகாராதி தானங்களையும்,  பூசை - அருகபரமனைப் பூஜித்தலையும்,
மெய் - உண்மையாகிற,   தவம் - த்வாதசவித தபங்களையும், செய்து
- புரிந்து,   கதிகளை - சதுர்க்கதிப் பிறப்புக்களை, கடந்து - தாண்டி,
(அதாவது : நீங்கி), வீட்டை - மோட்சத்தில், செல்வார் - போவார்கள்
(அதாவது : அடைவார்கள்), காரிகையார்கள் - ஸ்த்ரீமார்கள், செல்லார்
- தத்ஜன்மத்தில் மோட்சத்தில் செல்லமாட்டார்கள், எ-று.

     தத்ஜன்மத்தில்       ஸ்திரீமார்களுக்கு        மோட்சமில்லை
யென்பதைப்பற்றிய   விவரம்   ப்ராப்ரத்திரயம்   இரண்டாவது பகுதி,
பிரவசனஸாரத்தில், சாரித்ராதி காரமென்னும்  மூன்றாம் அதிகாரத்தில்,
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.                         (177)

 738. இந்திரன் றேவி மார்க்கு மிறைமைசெய் முறைமை யில்லை
     பைந்தொடி மகளி ராவார் பாவத்தாற் பெரிய நீரார்
     மைந்தரைப் பெறாமை பெற்றா லிழந்திடல் மாற்றுப் பெண்ணி
     லந்தரத் தனைய துன்பத் தாங்கதி நீங்கு வார்கள்.