(இ-ள்.)
இந்திரன் - தேவேந்திரனுடைய, தேவிமார்க்கும் -
பெண்சாதி மார்களுக்கும், இறைமைசெய் - தலைமைத்தன்மையாகிய
அதிகாரத்தைத் தாங்கள்செய்யும், முறைமை - கிரமமானது, இல்லை -
இன்று, பைம் - பசுமை பொருந்திய, தொடி - வளையல்களை யணிந்த,
மகளிராவார் - மனித ஸ்த்ரீமார்கள், பாவத்தால் - பாபவினையால்,
பெரியநீரார் - பெரிதாகிய குணமுடையவர்களாய்,
மைந்தரை -
புதல்வரை, பெறாமை - பெறாமல் மலடியாவதாலும்,
(அல்லது),
பெற்றால் - புதல்வர்ப்பெற்றால், இழந்திடல்
- அப்பிள்ளைகளை
இழந்து விடுவதினாலும், (அவையல்லாமலும்), மாற்றுப்பெண்ணில் -
தன் புருஷனுக்கு மற்றொரு ஸ்த்ரீ ஏற்படுவதனாலும்
(அதாவது :
ஸபத்னி அல்லது சக்களத்தி ஏற்படுவதாலும்), அந்தரத்தனைய
-
ஆகாயத்திற்குச் சமானமாகிய (அதாவது : அளவில்லாத), துன்பத்து -
துக்கத்தினால், ஆங்கதி -
தங்களுக்காகிய அக்கதியையும்,
‘நீங்குவார்கள் - நீங்கி
வேறொரு கதியையும் அடைவார்கள்,
எ-று. (178)
739. விரதசீ லத்த ராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து
அருகனைச் சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்புச் செய்து
கருதிநற் கணவற் பேணுங் கற்புடை மகளி ரிந்த
வுருவத்தி னீங்கிக் கற்பத் துத்தம தேவ ராவார்.
(இ-ள்.) விரதம்
- பஞ்சாணு விரதங்களையும், சீலத்தராகி -
சீலாச் சாரத்தையுமுடையவர்களாகி, மெய்த்தவர்க்கு - உண்மையாகிய
தபத்தையுடைய முனிவர் முதலாகிய பாத்திரர்களுக்கு,
தானம் -
ஆஹராதிதானங்களை, செய்து - கொடுத்து,
அருகனை -
அருகத்பரமேஸ்வரனது, சரணம் - பாதங்களில், மூழ்கி - படிந்து
(அதாவது : வணங்கி), ஆன்றவர் - மேலான நிலைமையையுடைய
பஞ்சபரமேஷ்டிகளின், சிறப்புச்செய்து -
பூஜையைச் செய்து,
நற்கணவன் - நன்மையான குணமுடைய தங்கள் புருடனை, கருதி -
மேலாக நினைத்து, பேணும் - ரக்ஷிக்கின்ற,
கற்புடை மகளிர்
பதிவிரதாகுணமுள்ள ஸ்த்ரீகள், இந்த வுருவத்தின் - இந்த
ஸத்ரீ
ரூபத்தினின்றும், நீங்கி - விலகி, (மறு
சன்மத்தில்), கற்பத்து -
ஸௌதர்மாதி கல்பங்களில், உத்தமம் - மேலான,
தேவராவர் -
கல்பவாஸிதேவர்களாகப் பிறப்பார்கள், எ-று.
அருகனைச் சரணமூழ்கி
யென்பது அருகன சரணமூழ்கி
என்றும், கருதி நற்கணவற்பேணும் என்பது, கருதுநற் கணவற்பேணும்
என்றும் பாடபேதமுண்டு. அவற்றைக் கொள்வார், அவற்றிற்குத்
தக்கவாறு உரை செய்து கொள்க. மேலான தேவராவர் என்றதனால்,
மஹர்த்திக தேவர்களாகவே பிறப்பரென்பது
கொள்ளப்படும்.
அருகனை - உருபுமயக்கம். (179)
740. மாதவந் தாங்கி வையத் தையராய் வந்து தோன்றி
யேதமொன் றின்றி வீடு மெய்துவர் தைய லார்க |