ஆனை மிசை - யானையின்மேல்,
வரும் - ஏறி வரும்படியான,
வணிகரவர் - (இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என்னும் மூவகைச்)
சிரேஷ்டிகள் தங்கியிராநின்ற, இடங்கள் - இடங்களாகிய
பெருங்கடை
வீதிகள், ஒரு பால் - ஒரு பக்கத்திலேயிருக்கும், எ-று. (4)
753. கந்தமலர் கந்தம்விழை கைவலவ ரொருபா
லந்தமிலா வறிவனுறை யாலையங்க ளொருபால்
வந்துலக மிறைஞ்சமன்ன னிருக்குமிட மொருபா
லந்தமிலா வின்னவிட மியார்க்குமுரைப் பரிதே.
(இ-ள்.)கந்த மலர் - வாசனையுள்ள மலர் மாலையையும்,
கந்தம்
- வாசனைப்பொடி முதலிய கந்த
வஸ்துக்களையும், விழை -
விரும்பிச் செய்கின்ற, கைவலவர் - கைத்தொழிலில் வல்லவர்கள், ஒரு
பால் - ஒரு பக்கத்தில் தங்கியிருப்பார்கள்
(அதாவது : இவர்கள்
குடியிருப்பு ஒரு பக்கத்திலிருக்கும்), அந்த
மிலாவறிவன் - அனந்த
ஞானத்தையுடைய ஜினேஸ்வரன், உறை
- தங்கியிராநின்ற,
ஆலயங்கள் - ஸ்ரீஜிநசைத்யாலங்களானவை, ஒரு
பால் - ஒரு
பக்கத்திலேயிருக்கும், உலகம் வந்து - உலகத்திலுள்ளவர்கள் வந்து,
இறைஞ்ச - வணங்க, மன்னன் - அரசன்,
இருக்கும் - தங்கி
யிருக்கும்படியான, இடம் - அரண்மனையிடங்கள்,
ஒரு பால் - ஒரு
பக்கத்திலே யிருக்கும், அந்தமிலா -
முடிவில்லாத, இன்ன -
இத்தன்மையாகிய, இடம் - இடங்களை, யார்க்கும் - எவர்களுக்கும்,
உரைப்பரிது - அளவிட்டுச் சொல்லுதல் அரிதாகும், எ-று. (5)
754. இந்நக ரிதற்கிறைவ
னேத்தரிய கீர்த்தி
மன்னனப ராசிதன் வயப்புலியோ
டொப்பா
னன்னமனை யார்மதன னாண்டகைப்பு
யத்தைத்
துன்னிய வசுந்தரி துளும்பிய
நலத்தாள்.
(இ-ள்.) இந்நகரிதற்கு - இவ்வித
நகரமாகிய சக்ரபுரமென்னும்
இதற்கு, இறைவன் - இராஜாவானவன், ஏத்தரிய
- ஸ்துதித்தற்கரிய,
கீர்த்திமன்னன் - புகழ்ச்சிக்குத்
தலைவனாகிய, அபராசிதன் -
அபராஜித மஹாராஜனென்பான், (இவன் வீரத்தில்), வயம் -
வெற்றி
பொருந்திய, புலியோடு ஒப்பான் - புலிக்கு
நிகரானவன், அன்ன
மனையார் - ஹம்ஸ பக்ஷிபோன்ற மிருதுவாகிய நடையையுடைய
ஸ்த்ரீமார்களுக்கு, மதனன் - மன்மதன்
போன்றவன், (இத்தகைய)
ஆண்டகை - ஆண்தன்மை பொருந்திய அரசனுடைய, புயத்தை -
தோளை, துன்னிய - சேர்ந்திராநின்ற,
துளும்பிய - ததும்பிய,
நலத்தாள் - அழகையுடைய பட்டத்தரசியானவள்,
வசுந்தரி -
வஸுந்தரியென்னும் பெயருடையவளாகும், எ-று. (6)
|