755. மழலைக்கிளி தேனமிர்தம் வான்கரும்பு
நல்லியாழ்
குழலொத்தெழு மொழிமதனன் கொடிமயிலஞ் சாய
லுழையிற்பொலி நோக்கத்துரு வக்கொடியி னோடு
மழலொத்திடும் வேலவன்றா னமர்ந்தொழுகும்
வழிநாள்.
(இ-ள்.) கிளி -
கிளிப்பிள்ளையின் சொல்லையும்,
தேன் -
மதுவையும், அமிர்தம் - அமிர்தத்தையும், வான் - சிறந்த, கரும்பு -
கரும்பையும், நல் - நன்மையாகிய, யாழ் - வீணையின் நாதத்தையும்,
குழல் - புள்ளாங்குழலினுடைய தொனியையும், ஒத்து - (ஒவ்வொரு
குணங்களால்) நிகர்த்து, எழும் - உண்டாகின்ற,
மழலைமொழி -
மழலைச் சொல்லையும், மதனன் - மன்மதனுடைய,
கொடி -
துவஜமாகிய மீனத்தையும் (அதாவது :
மீனத்தை நிகர்த்த)
கண்களையும், மயிலஞ்சாயல் - ஆண் மயில் போன்ற
அழகியசரீரச்
சாயலையும், உழையில் - பெட்டைமானினது
பார்வையைப்போல,
பொலி - விளங்குகின்ற, நோக்கத்து -
மருண்ட பார்வையையும்
(உடைய), உருவம் - ரூபம்
பொருந்திய, கொடியினோடு -
புஷ்பக்கொடிபோன்ற அவ்வஸுந்தரியினோடும், 1அழலொத்திடும் -
அக்கினிபோன்ற, வேலவன்றான் - வேலாயுதத்தையுடைய
அபராஜித
மஹாராஜன், அமர்ந்து -
பொருந்தி, ஒழுகும் நாள்வழி
-
இல்வாழ்க்கையில் செல்கின்ற காலத்தில், எ-று.
1அழலொத்தெழும் -என்றும் பாடபேதமுண்டு, மதனன் கொடி,
உவமையாகு பெயராய்க்கண்களை யுணர்த்தி நின்றது. (7)
756. தேசுடைய சீயசந்தன் கேவச்சத்தின் வழுவி
வாசமுல வுங்குழலி மங்கைதன் வயிற்றுட்
டூசுபொதி பாவையெனத் தேன்றியவன் மண்ணோர்க்
காசைகெட வந்ததொரு மாமணிய தானான்.
(இ-ள்.) தேசுடைய - ஒளியையுடைய,
சீயசந்தன் - (பூர்வம்
தபோபலத்தால் அஹமிந்திரலோகத்தில்
தேவனாயவதரித்த
பிரீதிங்கரனென்னும் அஹமிந்திரனாகிய)
சிம்மச்சந்திரன்,
கேவச்சத்தின் - உபரிமோ பரிமமென்னும் கிரை
வேயகத்தினின்றும்,
வழுவி - ஆயுரவஸானத்து நழுவி, வாசமுலவும் - பரிமளம் வீசுகின்ற,
குழலி - அளகபாரத்தையுடையவளாகிய, மங்கை தன்
வயிற்றுள் -
இந்த வஸுந்தரியினுடைய கருப்பத்தில், (அடைந்து),
தூசு பொதி -
வஸ்திரத்தால் மூடப்பட்ட, பாவையென
- சித்திரப்பாவைபோல,
தோன்றி - அக்கருப்பத்தினின்றும் புத்திரனாகப்
பிறந்து, அவன் -
அக்குமாரன், மண்ணோர்க்கு -
பூமியிலுள்ள ஏழைகளுக்கு,
(உண்டாகிய), ஆசை - பொருளாசையானது, கெட - நீங்கும்படியாக,
வந்தது - வரப்பட்டதாகிய, ஒரு -
ஒப்பற்ற, மா - பெருமை
பொருந்திய, மணியதானான் - ஒரு இரத்தினத்துக்குச் சமானமானான், எ-று.
|