மன்னருக்க வேகன்மலி காவிட்டத்தின் வழுவி
யன்னவர்க டம்புதல்வ னாகியவ தரித்தான்.
(இ-ள்.) மின்னினொடு
- மின்னற்கொடியோடு, மேகம் -
மேகமானது, விளையாடுவதுபோல - சேர்ந்து விளையாடுவதுபோல,
அன்னநடையோடு - ஹம்ஸ பக்ஷிபோன்ற
நடையையுடைய வச்
சித்ரமாலையோடு, அவன் - அச்சக்கராயுதன், அமர்ந்து - பொருந்தி,
ஒழுகும் வழிநாள் - செல்கின்ற நாட்களில், மன்னருக்க வேகன் -
பூர்வத்தில் பொருந்திய கிரணவேகனாகிய
அரசன், மலி -
நிறைவுபெற்ற, காவிட்டத்தின் - காபிஷ்ட கற்பகத்தினின்றும்,
வழுவி
- ஆயுரவஸாநத்தில் நழுவி,
அன்னவர்கள் தம் - அந்தச்
சக்கராயுதன் சித்ரமாலையாகிய
தம்பதிகளுடைய, புதல்வனாகி -
புத்திரனாகி, அவதரித்தான் - பிறந்தான், எ-று. (13)
வேறு.
762. வானத்து மின்னு முன்னாண் மதியினைப் பயந்த தேபோற்
றேனொத்த மொழியி னாளத் தேவனைப் பெற்ற போழ்தி
னூனத்தை வையத் தின்க ணகற்றிநின் றுதவி மன்னன்
மானத்தை யுடைய நாமம் வச்சிரா யுதனென் றிட்டார்.
(இ-ள்.) வானத்து
- ஆகாயத்திலுண்டாகிய,
மின்னு -
மின்னற்கொடியானது, முன்னாள் -
பூர்வபட்சத்து, மதியினை -
சந்திரனை, பயந்ததேபோல் -
பெற்றதுபோல, தேனொத்த -
தேனினை நிகர்த்த இனிமை
பொருந்திய, மொழியினாள் -
வசனத்தையுடைய சித்ரமாலையானவள்,
அத்தேவனை -
அந்தக்காபிஷ்ட கல்பத்துத்
தேவனை, பெற்றபோழ்தில் -
குமாரனாகப் பெற்ற காலத்தில்,
மன்னன் - சக்கராயுத
மகாராஜனானவன், வையத்தின்கண் -
இந்தப் பூமியிலுண்டாகிய,
ஊனத்தை - யாசக ஜனங்களுக்குண்டாகிய வறுமையாகிற குற்றத்தை,
அகற்றிநின்று - நீக்கிநின்று,
உதவி - தானமாக
விசேஷ
பொருள்களை யளிக்க, ( அப்பிள்ளைக்குச்
சுற்றத்தார்கள் ),
மானத்தையுடைய - பெருமையை யுடைத்தாகிய, நாமம் - பெயரானது,
வச்சிராயுதனென்று - வஜ்ராயுத
குமாரனென்று, இட்டார் -
சூட்டினார்கள், எ-று. (14)
763. மதிகலை வளரத் தானும் வளர்வதே போல
மைந்தன்
விதியினாற் கலையும் வேந்தர்
விஞ்சையும் விளங்க வோங்கி
நுதிகொண்ட வேற்க ணல்லார்
நோக்கினுக் கிலக்க மானா
னதிபதி யதனை யாராய்ந் தரிவையர்ப் புணர்க்க லுற்றான்.
(இ-ள்.) (அதன்மேல்),
மதி - சந்திரனுடைய, கலை
-
ஷோடசகலைகள், வளர - பூர்வபட்சத்தில்
வளர, தானும் -
அச்சந்திரன்றானும், வளர்வதேபோல் - விருத்தி
|