சக்கராயுதன் முத்திச் சருக்கம் 357


Meru Mandirapuranam
 

யாவதுபோல்,   மைந்தன்   -   வச்சிராயுத  குமாரன், விதியினால் -
கிரமப்படி,     கலையும்     -    சாஸ்திரங்களும்,    வேந்தர்  -
இராஜாக்களுக்குரிய,  விஞ்சையும்  -  ஆயுதவித்தை  முதலியயுாவும்,
விளங்க -  மிகுதியாய்த்  தன்னிடத்தே விருத்தியடைந்து பிரகாசிக்க,
(அதாவது : அவற்றைக் கற்று அவை விருத்தியாகத் தானும்), ஓங்கி -
மேலாகி  வளர்ந்து,  நுதிகொண்ட  -  கூர்மை பொருந்திய, வேல் -
வேலாயுதம்போன்ற,    கண்    -   கண்களையுடைய,   நல்லார் -
ஸ்திரீமார்களுடைய,  நோக்கினுக்கு  - பார்வைக்கு, இலக்கமானான் -
குறியானான்  (அதாவது :  யௌவனத்தை  யடைந்தான்),  அதிபதி -
சக்ராயுத  மஹாராஜன்,   அதனை - அக்காரியத்தை, ஆராய்ந்து -
தெரிந்து,  அரிவையர்  -  ஸ்த்ரீமார்களை,  புணர்க்கல்  -   விவாக
விதியால்    அவனுக்கு  மனைவியராகச்  சேத்தலாகிய  காரியத்தில்,
உற்றான் - பொருந்தினான் (அதாவது : பிரவேசித்தான்), எ-று. (15)

 764. மருதம்வான் குறிஞ்சி முல்லை நெய்தலும் மயங்கி வானொத்
     திருதுவின் விகற்ப மின்றி யிலங்கிய சோலைத் தாகிப்
     பருதியின் வெம்மை யாற்றும் பதாகைசூழ் மாட மூதூர்
     பிருதிவி திலக மென்னும் பேருடை நகரமுண்டே.

   (இ-ள்.) மருதம்  - மருத  நிலமும், வான் - அழகிய, குறிஞ்சி -
குறிஞ்சி  நிலமும்,  முல்லை - முல்லை நிலமும், நெய்தலும் - நெய்த
நிலமும்,  (ஆகிய  நால்வகை  நிலங்களும்),  மயங்கி   -  சேர்ந்து,
வானொத்து   -   தேவலோகத்துக்குச்   சமானமாகியும்,  இருதுவின்
விகற்பமின்றி  - இருதுகாலங்களின் வித்தியாசமில்லாமல், இலங்கிய -
எப்பொழுதும்   குளிர்ச்சியாகவே   விளங்குகின்ற,  சோலைத்தாகி -
தோப்புகளையுடையதாகியும்  (அமைந்த), பருதியின் - ஸூர்யனுடைய,
வெம்மை -  வெப்பத்தை,  ஆற்றும் - தணிக்கும்படியான, பதாகை -
துவஜங்கள், சூழ் - சூழ்ந்திராநின்ற, மாடம் - உப்பரிகைகளையுடைய,
மூதூர் - பழமையான  ஊராகிய, பிருதிவி திலகமென்னும் - பிருதிவி
திலகமென்கின்ற,  பேருடை  -  பெயருடைய,  நகரம் - நகரமானது,
உண்டு - ஒன்றுளது, எ-று. (16)

 765. மற்றிந்த நகர்க்கு நாதன் மாலதி வேகன் மாண்ட
     பெற்றியான் றனக்குத் தேவி பிரியகா ரிணியென் பாளா
     மற்றிவர் தமக்கு மங்கை யிரதன மாலை யானாள்
     செற்றமி றவத்துத் தேவ னாயவச் சீத ரைதான்.

    (இ-ள்.)  இந்த  நகர்க்கு  -  இந்தப்   பிருதிவி திலகமென்னும்
பட்டணத்துக்கு, நாதன் - அரசனானவன், மால் - பெரிய, அதிவேகன்
- அதிவேகனென்னும்  பெயருடையவனாவான்,  மாண்ட - மாட்சிமை
பொருந்திய,     பெற்றியான்    தனக்கு    -    தன்மையையுடைய
அவ்வரசனுக்கு,   தேவி   -    பட்டத்தரசியானவள்,   பிரியகாரிணி
யென்பாளாம் - பிரியகாரிணியென்னும் பெயருடையவளாவாள், இவர்
தமக்கு -