(இ-ள்.) நற்காட்சி - ஸம்மியக்தரிசனத்தை, உடை -
உடைத்தாகிய, விலங்கு - விலங்குகளும், மானிடரும் -
மனுஷ்யர்களும், வதம் - பஞ்சாணு விரதத்தை, செறிந்தும் - சேர்ந்து
(அனுஷ்டித்தாலும் அனுஷ்டிக்காவிட்டாலும்), கற்பாதி முதலாக -
கல்பத்துக்கு முதலாகிய ஸௌதர்ம கல்பம் முதலாக, கற்பாந்தம் -
அச்சுதகல்பம் வரையில், உற - பொருந்த, செல்வர் - அடைவார்கள்,
நற்பால - நன்மையின் பகுதியாகிய, வதம் - பஞ்சாணு விரதங்களை, செறிந்த - சேர்ந்திராநின்ற, நரர் - மனுஷ்யர்கள், பவணாதி -
பவணலோகம் முதல், கற்பாந்தம் - அச்சுத கல்பம் வரையிலும்,
விலங்கு - விலங்குகள், (பவணலோகம் முதல்) சாசராந்தம் -
ஸஹஸ்ரார கல்பம் வரையிலும், முறையுளி - வரிசைக்கிரமமாக,
காண்பர் - அடைவார்கள், எ-று. (76)
77. போகநில விலங்குநரர் பொருந்தியநற் காட்சியரேல்
நாகமுத லாஞ்சோத மீசான நண்ணிடுவர்
மோகமிச்சார் பவணர்வி யந்தரர்சோ திடராவா
ராகுபவ ரணுதிசாணுத் தரத்தைய மறத்தெளிந்தார்.
(இ-ள்.) போகநிலம் - போக பூமியிலிராநின்ற, விலங்கும் -
விலங்குகளும், நரர் - மனுஷ்யர்களும், பொருந்திய நற்காட்சியரேல் -
ஸம்மியக் தர்சனத்தை யுடையவர்களானால், நாகம் -
தேவலோகத்துக்கு, முதலாம் - முதலாகிய, சோதமீசானம் - ஸௌதர்ம
ஈசான கல்பத்தை, நண்ணிடுவர் - அடைவார்கள்; மோகமிச்சார் -
மோகநியபரிணாமமுள்ள மித்தியாதிருஷ்டிகள், பவணர் -
பவணர்களாகவும், வியந்தரர் - வியந்தரர்களாகவும், சோதிடர் -
ஜோதிஷ்கர்களாகவும், ஆவார் - பிறப்பார்கள், ஐயமறத்தெளிந்தார் -
சந்தேகமின்றித் தெளிந்த க்ஷாயிக சம்மியக் தர்சனத்தையுடைய
மஹாமுனிகள், அணுதிசை - நவாணுதிசையிலும், அணுத்தரத்து -
பஞ்சாணுத்தரத்திலும், ஆகுபவர் - அடைபவராவார்கள், எ-று. (77)
78. மீனாணும் பெண்ணு நாற்காலுங் காலிலவும்
வான்மேல் வருவ தவழ்வ குறியிலவு
மேன்மேல வேழ்நரகின் கீழ்ச்செல்லா மேற்செல்லு
மேனான்கு வீடுதவம் விரதம்விலங் காமுறையே.
(இ-ள்.) மீன் - ஸ்வயம்புரமண சமுத்திரத்திலிராநின்ற
மகாமஸ்யங்களும், ஆணும் - ஆடவர்களும், பெண்ணும் -
ஸ்திரீகளும், நாற்காலும் - சதுஷ்பாத ஜீவன்களும், கால்
இலவும் - கால் இல்லாதனவாகிய சர்ப்பம் முதலியனவும்,
வான்மேல் - ஆகாயத்தின்மேல், வருவ - பறந்து வருவனவாகிய பட்சி முதலியனவும், தவழ்வ - தவழ்ந்து செல்வனவாகிய ஆமை
முதலியவைகளும்,
குறியிலவும் - மனமில்லாத அதாவது :
அஸஜ்ஞிபஞ்சேந்திரியமாகிய
ஓணான் முதலியவைகளும், ஏழ்நரகின் -
ஏழுநரகங்களில், மேன்மேல -
ஒன்றுக்கொன்று மேலே |