(இ-ள்.) (அதன்
மேல்) கடி - வாசனை
பொருந்திய,
மலர்க்கொடியனாளை - புஷ்பக்கொடிக்குச்
சமானமாகிய
அவ்விரத்தினமாலை யென்னு மாசகுமாரத்தியை,
காவலகுமரன் -
இராஜ குமாரனாகிய வஜ்ராயுதன், எய்தி - விவாஹ
விதி பூர்வமாக
வடைந்து, வடிவுடை - ரூபத்தையுடைய,
தடக்கை - துதிக்கை
பொருந்திய, வேழம் - ஆண்யானையானது,
பிடியொடு -
பெண்யானையுடன், மகிழ்வதேபோல்
- மனமொத்துக் கூடி
ஸந்தோஷிப்பதுபோல, மலர்க்கொடிப்பந்தர் -புஷ்பக்கொடிகளாலாகிய
லதாமண்டபங்களிலும், குன்றம் - செய்குன்றங்களிலும்,
வாலியும் -
தடாகங்களிலும், காவும் - பூங்காவுகளிலும்,
எய்தி - (அவளுடன்)
அடைந்து, படி மிசை - பூமியில், பட்ட -
உண்டாகிய, இன்பம் -
போக சௌக்கியத்தை, பரிவின்றி - வருத்தமில்லாமல், நுகருநாளில் -
அனுபவித்திருக்கின்ற நாட்களில், எ-று. (24)
773. இன்பநீர்க் கடலை யேறி யிசோதரை யான தேவ
னன்பினாற் சிறுவ னானா னரதன மாலைக் கன்று
நந்திய மதியைக் கண்ட நளிகடல் போன்று ஞால
மந்தமி லுவகை யெய்த வரதனா யுதனென் றாரே.
(இ-ள்.)
இசோதரையான - யசோதரையான,
தேவன் -
தேவனானவன், (அதாவது : முன் யசோதரையாயிருந்து
அந்த
ஜன்மம்நீங்கிப் பின்னர் தேவஜனன
மெடுத்த காபிஷ்டகல்பத்
தேவனானவன்), இன்பம் - தேவ (இன்பத்தின்,
நீர் - குணம்
பொருந்திய, கடலை - தனது ஆயுஷ்யஸ்திதியாகிய கடற்காலங்களை,
ஏறி - கடந்து, (ஆயுரவஸானத்தில்), அரதனமாலைக்கு -
இந்த
இரத்தினமாலை யென்னும் பெண்ணுக்கு,
அன்பினால் -
பூர்வவாஞ்சையினால், சிறுவனானான் - புத்திரனாகத் தோன்றினான்,
அன்று - அப்பொழுது, ஞாலம் - இப்பூமியிலுள்ளோர்,
நந்திய -
நிறைந்த, மதியை - பூர்ணச்சந்திரனை,
கண்ட - பார்த்த, நளி -
குளிர்ச்சியையுடைய, கடல்போன்று - சமுத்திரம்போன்று, (அதாவது :
அச்சந்திரனைக்கண்ட சமுத்திரம் பொங்கி ஒலிப்பதுபோல),
அந்தமில்
- முடிவில்லாத, உவகை - ஸந்தோஷத்தை,
எய்த - அடைய,
(அவனுக்கு அவனுடைய தாய்தந்தையர்),
அரதனாயுதனென்றார் -
இரத்தினாயுதனென்று நாமகரணம் செய்தார்கள், எ-று. (25)
774. வாரிசூழ் வையத் தின்கண்
வறுமையைக் கெடுக்க வந்த
பாரிசா தத்தின் கன்றிற் பரிவின்றி
வளர்ந்து மைந்தன்
வேரிசூழ் கூந்த லாரை வேள்வியா
லெய்தி யின்பம்
பூரியா மனத்த னாகிப் போகத்தி னாற்ற வீழ்ந்தான்.
(இ-ள்.)
வாரிசூழ் - சமுத்திரஞ்சூழ்ந்த, வையத்தின்கண் -
இப்பூமியில், வறுமையை - தரித்திரத்தை, கெடுக்க - நீக்கும்படியாக,
வந்த - தோன்றிய, பாரி
|