362மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

சாதத்தின்  கன்றில்  -   கற்பக  விருக்ஷத்தினது  இளங்கன்றுபோல,
மைந்தன்  -    இரத்தினாயுத    குமாரனானவன்,    பரிவின்றி   -
துன்பமில்லாமல்,  வளர்ந்து  -  வளர்ந்து யௌவன வயதையடைந்து,
வேரிசூழ்  -  வாசனைநிறைந்த,  கூந்தலாரை  -  அளகத்தையுடைய
இராஜ கன்னிகைகளை,  வேள்வியால் - ஒளபாசன விவாக விதிக்கிர
மத்தால்,  எய்தி  - அடைந்து,  பூரியா  -  (தேகம் சந்தோஷத்தால்)
பூரித்து,  இன்பம்   -   சௌக்கியம்  பொருந்திய,  மனத்தனாகி  -
மனதுடையவனாகி,  போகத்தின் - காமபோகத்தில், ஆற்ற - மிகவும்,
வீழ்ந்தான் - மூழ்கினான், எ-று. (26)

 775. தானுந்தன் மகனும் பின்னை யவன்மகன் மகனு மாய்ப்பே
     ரானந்தத் தழுந்து கின்ற நல்லப ராசி தன்போ
     யூனந்தீர் தவத்தி லூற்றுச் செறித்தமா தவனை யேத்தி
     யீனந்தீ வினைகட் காக்கு முபாயமென் னிறைவ வென்றான்.

   (இ-ள்.) (இவன் இவ்வாறிருக்கின்ற காலத்தில்), தானும் - தானும்,
தன்  மகனும் -  தன் புத்திரனாகிய சக்ராயுதனும், பின்னை - பின்பு,
அவன்  மகன்  -  அவன்  குமாரனாகிய  வஜ்ராயுதனும், மகனும் -
அவன்   குமாரனாகிய   இரத்தினாயுதனும்,  ஆய்  -  விருத்தியாகி,
(இப்படிப் புத்திர, பவுத்திர, பிரபவுத்திரர்களோடு), பேர் - பெரிதாகிய,
ஆனந்தத்து  -  ஸம்ஸாரசுகத்தில்,  அழுந்துகின்ற - தங்கியிராநின்ற,
நல் -  நன்மைபொருந்திய,  அபராசிதன்  -  அபராஜித மகாராஜன்,
போய் -  தப  ஸ்ரீஷ்ட  முனிகளிருக்கும் இடம்சென்று, ஊனந்தீர் -
குற்றநீங்கிய,   தவத்தில்  -  தபஸினால்,  ஊற்று  -  ஆஸ்ரவத்தை,
செறித்த -   தடைசெய்த,   மாதவனை   -  மஹா   தபஸையுடைய
பிஹிதாஸ்ரவரை, ஏத்தி  - ஸ்தோத்திரம் செய்து, இறைவ - நாதனே!,
தீவினைகட்கு -   பொல்லாங்காகிய   கருமங்கட்கு,   ஈனமாக்கும் -
குறைவைச்  செய்யும்   (அதாவது :    அக்கருமங்களைக்  குறைத்து
நீக்கும்படியான), உபாயம் - உபாயமானது, என் - யாது?, என்றான் -
என்று கேட்டான், எ-று. (27)

 776. வினையுயிர் கட்டு வீட்டின் மெய்ம்மையையறிந்து தேறித்
     தினையனைத் தானும்பற்றிற் செறிவிலா நெறியை மேவித்
     தனைவினை நீங்கி நின்ற தன்மையை னாக நோக்க
     வினையெனைத் தானும் நீங்கும் விகாரங்க ளோடு மென்றான்.

    (இ-ள்.) (அவ்வாறு  வினவியவுடனே),  வினை - கர்மங்களினது,
மெய்ம்மையை -  உண்மை  ஸ்வரூபத்தையும்,   உயிர் - ஜீவனுடைய,
மெய்ம்மையை -   உண்மை ஸ்வரூபத்தையும், கட்டு - ஜீவனிடத்தில்
கர்மங்கள்   பந்திக்கும்   பந்தத்தின்,  மெய்ம்மையை  -  உண்மை
இயல்பையும்,   வீட்டின்   - (  அக்கருமங்கள்  ஆத்மனைச்சேர்ந்து
பந்திக்காமல்  நீங்கி  நின்றுவிடுகிற ஜீவனுடைய சுத்தத்தன்மையாகிற)
மோட்சத்தின்,  மெய்ம்மையை  -   யதாஸ்வரூபத்தையும்,  அறிந்து -
ஸம்மியத்