364மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

    (இ-ள்.)  (அவ்வாறு)  அபராஜிதன்  -  அபராஜித மஹாராஜன்,
மாதவனாயின பின் -  மஹாதபஸைச் செய்யும்படியான முனிவரனான
பின்பு,    சகராயுதனும்    -    சக்ராயுதராஜனும்,   உவரோதம்  -
உவர்ச்சமுத்திரத்தை,  உடுத்த  -  ஆடையாக வுடுத்திய (அதாவது :
சமுத்திரத்தாற்  சூழப்பட்ட),   நிலத்தையெலாம்  -  பூமிராஜ்யத்தை
யெல்லாம்,  தளராமை - தளர்ச்சியில்லாமல் (அதாவது : துன்பமின்றி),
நிறுத்தி -  ஸ்தாபித்து,  அவன் - அச்சக்கராயுதன், அபராஜிதனும் -
பிறவரசர்களால்  ஜெயிக்க  முடியாதவனும்,  ஆயினன்  - ஆனான்,
எ-று. (30)

 779. பொறிமீ துபுலத் தெழுபோ கமெலா
     மிறவா திரவும் பகலும் நுகரா
     நிறையா தொழியப் பினெருப் பினிடை
     விறகே யிவையென் றுவெறுத் தனனே.

   (இ-ள்.)  (அவ்வாறானபின்),   பொறி  - பஞ்சேந்திரியங்களால்,
புலத்து -  விஷயவஸ்துக்களின், மீது - மேலே, எழும் - உண்டாகிய,
போகமெலாம் -  போ  கோபபோகங்களை  யெல்லாம், இறவாது -
நீங்காமல்,  இரவும் -  இராத்திரியிலும், பகலும் - பகலிலும், நுகரா -
அனுபவித்தும்,  நிறையாது - திருப்தியாகாமல், ஒழிய - நீங்க, பின் -
பிறகு,   இவை  -    இந்த   இந்திரியவிஷய   போகங்களானவை,
நெருப்பினிடை -  அக்கினியிடத்தில்  அகப்பட்ட, விறகே யென்று -
விறகுக்குச்  சமானமே   யாகுமென்று,   வெறுத்தனன்  -  அவற்றை
வெறுத்து வைராக்கிய முற்றான், எ-று. (31)

 780. அறிவா லறியா வறியா வதனாற்
     பிறிதாம் வினையைப் பிணியா வதனா
     னிறையா துநிலா துவிருப் புறநின்
     றுறவே முயல்வா ருணர்வொன் றிலரே.

    (இ-ள்.) (அங்ஙனம் வைராக்கியமுற்றபின்), அறிவால் - ஸம்மியக்
ஞானத்தினாலே,   அறியா  -  (ஜீவாதி  பதார்த்தங்களை  ஹேயோ
பாதேய ஸ்வரூபந்தெரிந்து  வீதராகத் தன்மையாகிய சுத்தோபயோகம்
பெற) அறியாத,  அதனால்  -  அத்தன்மையினால், அறியா - வஸ்து
ஸ்வரூபமறியாத,    பிறிதாம்   -  தனது   ஸ்வரூபத்துக்குவேறாகிய,
வினையை   -   புத்கல  பரியாயமாகிய  கர்மங்களை,  பிணியா  -
பந்தித்துக்கொண்டு,   அதனால்   -  அக்கர்மங்களின்  பந்தத்தால்,
நிறையாது - ஸம்சார விஷய சுகமானது  நிறைந்து திருப்தியாகாமலும்,
நிலாது  -   நிற்காமல்   அனித்திய    ஸ்வரூபமாகவும்,  விருப்பு -
ஆசையானது,  உற  நின்று  -  பொருந்த  நின்று,  உறமுயல்வார் -
இந்திரிய   விஷய  சுகமடைய  முயற்சிப்பவர்,  உணர்வொன்றிலர் -
ஸம்மியக் ஞானோதயமில்லாத அஞ்ஞானிகளாவர், எ-று. (32)