சக்கராயுதன் முத்திச் சருக்கம் 365


Meru Mandirapuranam
 

 781. வினையான் வருமின் பம்வெறுத் திடவே
     தனையே நுதலிற் தளரா வகையா
     னினைவான் வினைநீங் கிநிறைந் துடனே
     புனையா துபொருந் துமனந் தசுகம்.

   (இ-ள்.)  வினையால்  - கர்மங்களினால்,  வரும்  -  வருகின்ற,
இன்பம் - ஸம்ஸார  சுகத்தை, வெறுத்திட - வெறுத்துநீக்க, தனையே
-  தனது   ஆத்மபாவனையையே,    நுதலி  -   கருதி,  தளரா -
தளர்ச்சியடையாத,   வகையால்  -   விதத்தினாலும்,   நினைவால் -
தியானத்தாலும், வினை - கருமங்கள், புனையாது - சேராமல், நீங்கி -
விலகி,   உடனே  -   அப்பொழுதே,  அனந்த  சுகம்  -  அனந்த
ஸௌக்கியமானது,   நிறைந்து   -   நிறைவுபெற்று,   பொருந்தும் -
அடையும், எ-று. (33)

 782. முடிவில் லதுமுன் னமுமென் கணதற்
     றடையாம் வினையைத் தவநீ தியினிற்
     றடைவன் னினியென் றரசன் னினையா
     வடிவே லவன்வச் சிரவா யுதன்மேல்.

    (இ-ள்.)   (ஆதலின்), முன்னமும்  - முந்தியும்,  முடிவில்லது -
முடிவில்லாததும்,   என்கணதன்  - என்னிடத்துள்ள  ஆத்மஸ்வபாவ
குணத்தின், தடை -  தடையானதும்,  ஆம் -  ஆகிய,  வினையை -
பாவகர்ம திரவியகர்மங்களை, தவநீதியினில் - தபோநீதியால், இனி -
இனிமேல், தடைவன் - தடைசெய்வேன்,  என்று -  என்று, அரசன் -
சக்ராயுர   மஹாராஜன்,   நினையா  -  நினைத்து,  வடிவேலவன் -
கூர்மைபெற்ற வேலாயுதத்தை  யுடையனவாகிய, வச்சிரவாயுதன் மேல்
- தனது குமாரனாகிய வஜ்ஜிராயுதன்மேலே, எ-று.

        இதுவும் அடுத்தசெய்யுளும் குளகம். (34)

 783. முடியும் படியும் முதலா யினவைத்
     தடைவே லரசன் னபரா சிதனாம்
     வடுவின் முனிவன் னடிமா மலரை
     முடியின் னணியா முனியா யினனே.

   (இ-ள்.)  முடியும் -  கிரீடமும், படியும் - பூமியும், முதலாயின -
முதலாக உள்ள இராஜ்ஜிய சம்பந்தமானவைகளை யெல்லாம், வைத்து
- ஸ்தாபிதம்   செய்து,   அடை  -  கையிற்  பொருந்திய,  வேல் -
வேலாயுதத்தையுடைய,    அரசன்   -    சக்ராயுத    மஹாராஜன்,
அபராசிதனாம்  -  அபராஜிதனென்னும்  பெயரை  யுடையவனாகிய,
வடுவில் - குற்றமில்லாத, முனிவன் - முனிவரனது, அடி - பாதமாகிற,
மா -  பெருமை  பொருந்திய,  மலரை  -  தாமரைமலரை, முடியின் - சிரசில், அணியா -