அணிந்து, (அதாவது :
அவனடியைச் சிரசினால் வணங்கி),
முனியாயினன் - முனிவனாகி ஜிநதீக்ஷையைக் கொண்டனன், எ-று.
(35)
வேறு.
784. சக்கரா யுதனும் போகித் தாதைதன் பாதஞ் சார்ந்து
மிக்கமா முனிவ னாகி
வெள்ளிடை யாதி யோகி
னிற்கும்வெவ் வினைக ணீங்க
விராப்பகல் படிம நின்று
பக்கநோன் பிரதி யோடும் பாவனை பயின்று சென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு), சக்கராயுதனும் - சக்ராயுதவரசனும், போகி -
இராஜ்யத்தினின்றும் நீங்கிப்போய், தாதைதன் -
தனது பிதாவாகிய
அபராஜித முனிவரனுடைய, பாதஞ்சார்ந்து
- பாதத்தையடைந்து
நமஸ்கரித்து, மிக்க - மிகுதியாகிய,
மா - பெருமையுடைய,
முனிவனாகி - முனிவரனாகி, வெவ்வினைகள்
- கடுமையான
வினைகள், நீங்க - விலகும்படியாக,
வெள்ளிடையாதி நிற்கும்
யோகின் - வெள்ளாகாசத்தில்
நிற்றல் முதலாகிய திரிகால
யோகங்களிலும், இராப்பகல் -
இரவும் பகலும், படிமம் -
பிரதிமாயோகத்திலும், நின்று
- நின்று, பக்கநோன்பு
-
பட்சோபவாஸம் மாஸோபவாஸங்களிலும், இரதியோடு
-
சந்தோஷத்தோடு கூடி, பாவனை - ஆத்ம பாவனையிலும், பயின்று - பழகி, சென்றான் - சென்றனன்,
எ-று. (36)
785. நெறிவழி யெங்குஞ் செல்லு மீட்சிநற் படர்ச்சி நின்ற
செறிவினிற் பொறிக ளாறுஞ் செறித்தசய் யமத்த னாகி
யறுவகைக் காய மோம்பி யருள்புரி யடக்கத் தோடும்
மறுதா வெறியுஞ் சிந்தை வழுவறத் தழுவி நின்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சென்று
பின்னரும்), நெறிவழியெங்கும் -
விஷயவழிகளினிடத்தெங்கும், செறிவினில்
- சேர்க்கையினாலே,
செல்லும் - செல்லுகின்ற, பொறிகளாறும்
- ஷட் இந்திரியங்களும்,
மீட்சி - அவைகளினின்றும் மீளுதலாய்,
நின்ற - நிலைபெற்ற,
நற்படர்ச்சி, ஸம்மியக்சாரித்திரத்தில்,
செறித்த - சேர்த்த
சய்யமத்தனாகி -
விஷயஸம்யமத்தை
யுடையவனாகி,
அறுவகைக்காயம் - ஷட்ஜீவனிகாயங்களை,
ஓம்பி - ரக்ஷித்து,
அருள்புரி - ஜீவதயவைச்செய்கின்ற, அடக்கத்தோடும் -
பிராணி
ஸம்யமத்தோடுங் கூடி, மறுதரவு - ஆத்மகுணத்தைத்
தடை
செய்யும்படியான கர்மங்களை, எறியும் - கெடுக்கும் படியான, சிந்தை
- 1தருமத்தியானத்தை, வழுவற - குற்றமற,
( அதாவது
நழுவுதலில்லாமல்), தழுவி - சேர்ந்து, நின்றான் - நிலைபெற்றான், எ-று.) (37)
________________________________________________
1தருமத்தியானத்தின் நாமங்களையுங் குணங்களையும்
பதார்த்த ஸாரத்தில் 30-வது உபயோகாதி காரத்தில் கண்டு கொள்க.
|