786. வேட்கையிற் பசியி னோயில் வேண்டலிற் பெறாமை தன்னிற்
றாட்சியி லிருத்தல் போதல் கிடத்தலி லுடாமை
தன்னிற்
காட்சியி லறிவின் ஞான
மின்மையிற் கலங்கிச் சித்த
மாட்சியைச் செலாத கத்துப்
பரிசைபன் மூன்றும் வென்றான்.
(இ-ள்.) (மேலும்),
வேட்கையில் - தண்ணீர்த் தாகத்தாலும்
(பிபாஸகத்தாலும்), பசியில் - பசியினாலும் (க்ஷுத்தினாலும்),நோயில் -
பிணியாலும் (ரோகத்தாலும்), வேண்டலில்
- யாசித்தலாலும்
(யாசனாவாலும்), பெறாமைதன்னில்
- (வேண்டியதைப்)
பெறாததினாலும் (அலாபத்தாலும்), தாட்சியில்
- தளர்வில்லாது,
இருத்தல் - (பொருந்திய
யோகாஸனத்தில்) இருத்தலாலும்
(நிஷத்தியாவினாலும்), போதல் - (ஆகாராதிகளின்
பொருட்டுச்)
செல்லுதலாலும் (சர்யாவாலும்), கிடத்தலில்
- படுத்தலினாலும்
(சையாவாலும்), உடாமைதன்னில் - (ஆடை)
உடாமையினாலும்
(நக்னியாவாலும்), காட்சியில் -
அதரிசனத்தாலும், அறிவில் -
பிரஜ்ஞாவினாலும், ஞானமின்மையில் - அஞ்ஞானத்தாலும், சித்தம்
கலங்கி - சித்தமானது கலக்கமுற்று, மாட்சியை
- பெருமையில்,
செலாது - சேராததாலும் ( அரதியினாலும் ),
( உண்டான
வேதனைகளாகிய), அகத்துப்பரிசை - அப்பியந்தர
பரீஷஹங்கள்,
பன்மூன்றும் - பதின் மூன்றையும், வென்றான் - ஜெயித்தான், எ-று.
மோக்ஷார்த்திகள் தவம்பொருந்தித்
தியானம் குலையாது
சம்யமத்தில்நிற்க வேண்டின் தங்களுக்கு
நேரிடும் கஷ்டங்களைப்
பரிகரிக்க முயலாது அவைகளைச் சகித்து ஜெயிக்கவேண்டும். அந்த
வேதனைகளுக்கு பரீஷகங்களென்றும், அவைகளைத்
தளராது
சகித்தற்குப் பரீஷக ஜெயமென்றும் பெயர். காயசம்பந்தமாயுண்டாகும்
கஷ்டங்கள் பாஹ்யபரீஷஹமென்றும், மனோசம்பந்தமாயுண்டாகுமவை
அப்பியந்தர பரீஷஹ மென்றும்
பரீஷகம் இருவகைப்படும்.
இச்செய்யுளில் கூறப்பட்டுள்ளவை
13 - ம் அப்பியந்தரபரீஷகம்.
அடுத்த செய்யுளில் பாஹ்யபரீஷகம் 9 - ம் கூறப்படும். ஆக பரீஷக மொத்தம் 22. (38)
787. வெப்பமுங் குளிரும் மாசுஞ் சிற்பமுந்துறலும்
வெஞ்சொற்
செப்பலுங் கொலையுந் தின்றல்
குத்தலுந் தீய வூறுந்
துப்புறழ் வாயி னார்தந் தொடர்ச்சியாம் பரிசை
யுள்ளிட்
டொப்பிலாப் புறத்துநின்ற
வொன்பது மொருங்கு வென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு
ஜெயித்துப் பின்னரும்), வெப்பமும் -
உஷ்ணமும், குளிரும் - சீதமும்,
மாசும் - மலஸ்பரிசமும்,
சிற்பமுந்துறலும் - ஸத்கார புரஸ்காரமும், வெஞ்சொற் செப்பலும் -
ஆக்குரோசமும், கொலையும் - வதையும்,
தின்றல் குத்தலும் -
தெம்சமசகமும், தீயவூறும் - திரணஸ்பரிசமும், துப்புறழ் - பவ
|