368மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

ளத்தை  ஒத்திராநின்ற,  வாயினார்தம்  - வாயையுடைய ஸ்த்ரீகளின்,
தொடர்ச்சியாம்  -  சேர்க்கையாகிய,  பரிசை  -  ஸ்த்ரீ பரீஷஹமும்,
உள்ளிட்டு   - சேர்ந்து, புறத்து நின்ற - பாஹ்யமாகிய, ஒப்பில்லா -
பொருந்துந்   தன்மையில்லாத,     ஒன்பதும்   -  இந்த   ஒன்பது
பரீஷஹங்களையும்,    ஒருங்கு    -    ஒருமிக்க,    வென்றான் -
(ஆத்மபாவனாஸ்திரத்  தியானத்தாலும்,  ஸம்மியக்ஞான பலத்தாலும்),
ஜயித்தான், எ-று. (39)

 788. சேதன மிதா மாயுஞ் செல்வன நிற்ப வாயு
     மேதுவி னியல்பி னாகும் விகாரியாய் விகாரி யின்றி
     யோதிய வுருவ மாகி யிதரமா யுலக மாகி
     நீதியாற் பொருள்க ணின்ற நிலைமையை நினைத்து நின்றான்.

   (இ-ள்.)      பொருள்    -    (ஜீவ,     புத்கல   தர்மாதர்ம
ஆகாசகாலமென்னும்)        ஷட்திரவியங்கள்,     சேதனமாயும் -
(ஜீவத்திரவியம்)    சேதனமாகியும்,     இதரமாயும் - (மற்றவைந்தும்)
அசேதனத்   திரவியமாகவும்,   செல்வனவாயும் -   (ஜீவ    புத்கல
திரவியங்கள்) கமன சக்தியுள்ளனவாயும்,  நிற்பவாயும் - (மற்ற நான்கு
திரவியங்களும்)  ஸ்திர    பரிணாமத்தையுடையனவாயும்,   ஏதுவின்
(திரவியங்கள்  ஒன்றுக்   கொன்று)   ஹேதுவாகும்  தன்மையினால்,
இயல்பின் - ஸ்வபாவகுணத்தில், ஆகும் - உண்டாகும், விகாரியாய் -
(வியவஹாரநயத்தால்     ஜீவ     புத்கல    திரவிய    மிரண்டும்
விபாவபரியாயமுற்றுப்)     பலவிகாரத்   தன்மையையுடையனவாயும்;
விகாரியின்றி -  (மற்ற    நான்கும்    விபாவபரியாய   மில்லாமல்)
அவிகாரித்திரவியங்களாயும்,  ஓதிய  -  சொல்லப்பட்ட, உருவமாகி -
(புத்கலத்திரவிய  மொன்றுமே)    ரூபித்திரவியமாகியும்,  இதரமாய் -
(மற்றவைகள்)    அரூபித்திரவியமாகியும்,    உலகமாகி    - (இந்த
ஷட்திரவியங்களே ஒன்று  சேர்ந்து)  லோகமாகியும், நீதியால் - தன்
தன் குணபரியாய  நீதிக்கிரமத்தால்,    நின்ற   -   (உத்பாத,  விய,
த்ரௌவ்ய யுக்தமாகி,   ஸத்ஸ்வரூபமாய்)   நின்ற,   நிலைமையை -
(பொருளின்) நிலையான  தன்மையை, (அதாவது :  அதனதன் நிச்சய
குணத்தன்மையை),    நினைத்து    -    தியானித்து,   நின்றான் -
(ஹேயஸ்வரூபத்  தியாகமும், உபாதேயஸ்வரூப  ஸ்வீகாரமும் செய்து)
நின்றான், எ-று.

     ஷட்திரவியங்களினது,      திரவிய,      குணபரியாயங்களின்
விசேஷங்கள் இன்னும் விரிவாகப் பதார்த்தஸாரம் ஒன்று முதல் நாலு
அதிகாரங்களிலும்,ஸர்வார்த்தஸித்தி, ஸுகபோதை, என்னும் நூல்களில்
ஐந்தாவது  அத்தியாயத்திலும்,  ப்ராப்ரதத்திரயம்  முதல்  அதிகாரம்
ஆகிய பஞ்சாஸ்திகாயத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றன. (40)

 789. அணுவினா லளக்க மூன்றுக் கயங்கிய பதேச மாகு
     மணுவினுக் கேக மாகு மனந்தமா காய தேச
     மிணையிலாக் கால மூன்றா மேற்றிழி வாய னந்தம்
     பணிவிலாப் பவங்க ருப்போப் பாதமூர்ச் சனைநி னைந்தான்.