(இ-ள்.)
அணுவினால் -
புத்கலத்திரவியத்தின்
ஜகன்னியாம்சமாகிய பரமாணுவினால், அளக்க -
அளக்குமிடத்தில்,
மூன்றுக்கு - (ஜீவ, தர்ம, அதர்மமென்கிற) இம்மூன்று திரவியங்கட்கு,
அயங்கியபதேசமாகும் - அஸங்கியாதப் பிரதேசமாகும், அணுவினுக்கு
- புத்கல பரமாணுவுக்கும் கால
பரமாணுவுக்கும், ஏகமாகும் -
ஏகப்பிரதேசமாகும், ஆகாயம் - ஆகாசத் திரவியமானது, அனந்தம்
தேசம் - அனந்தப் பிரதேசமுடையதாகும்,
இணையிலா -
ஒன்றோடொன்று சேர்தலில்லாமல் ஏகப்பிரதேசியாய்
இருக்கின்ற,
காலம் - நிச்சய பரமாணுத்திரவிய
காலமானது, மூன்றாம் -
(வியவஹார பரியாயத்தினால், பூத, பவிஷ்ய, வர்த்தமான மென்னும்)
மூன்றாகும், (அதுவன்றியும்), ஏற்று - உத்ஸர்ப்பிணியென்றும், இழிவு -
அவஸர்ப்பிணியென்றும், ஆய்
- ஆகி, அனந்தம்
-
முடிவில்லாததாகும், பணிவிலாப்பவம் - குறையாத ஸம்ஸாரப்பிறப்பில்,
(நீங்காமல் இருக்கின்ற), கருப்பம்
- கர்ப்பமும், உப்பாதம் -
உபபாதமும், மூர்ச்சனை -
மூர்ச்சனையும், (ஆகிய திரிவித
ஜன்மஸ்தான விவரங்களையும்), நினைந்தான் - நினைத்து
ஹேயஸ்வரூபத் தியாகமும் உபாதேயஸ்வரூபஸ்வீகாரமும்
செய்தான்,
எ-று. (41)
790. உதயத்தி னுபச மத்திற் கேட்டிற்கேட் டவிவு தன்கட்
பதமொத்த பரிணா மத்தாம் பஞ்சபா வத்தை யுன்னி
யிதமுத்தி யிதற்கு பாய மிரதனத் திரயந் தீய
மதமதற் குபாயந் தன்னை யிதமின்மை மனத்துள் வைத்தான்.
(இ-ள்.)
உதயத்தின் - ஏக
விம்சதி பிரகாரம்
கருமோதயத்தினாலாகிய உதய
பாவத்தினாலும், உபசமத்தில் -
(ஸஜ்ஞி பஞ்சேந்திரிய
பரியாப்தி ஜீவன்களுக்கு
காலலப்தியாதிப்ராப்திகளினால் ஸப்தவித
தர்சன மோஹனீய
கருமங்களும், மற்ற சாரித்திர மோஹனீய கருமங்களும்
உபசமத்தை
யடைந்த காலத்தாகும்) உபசமபாவத்தாலும்,
கேட்டில் - (ஞான
தர்சனாவரணாந்தராய மோஹனீயங்களது
நிரவசேஷ
க்ஷயத்தினாலாகிய நவவிதமாகிய)
க்ஷாயிக பாவத்தாலும்,
கேட்டவிவுதன்கண் - க்ஷயோபசம பாவத்தினிடத்தாலும், (அதாவது :
சில கருமங்களது கேட்டினாலும், சில
உபசமத்தாலுமாகும் மிசிர
பாவத்தாலும்), பதமொத்த - பதத்தில் பொருந்திய, பரிணாமத்து -
திரிவித பாரிணாமிக பாவத்தாலும், ஆம் - ஆகின்ற, பஞ்சபாவத்தை
- பஞ்சவிதமான பரிணாமங்களை, உன்னி -
தியானித்து, இதம் -
ஆத்மனுக்கு இதமாகிய, முத்தி - மோட்ச ஸ்வரூபத்தையும், இதற்கு -
இந்த மோட்ச ஸ்வரூபத்திற்கு
உபாயம் - மார்க்கமாகிய,
இரதனத்திரயம் - (ஸம்மியக் தர்சன,
ஸம்மியக்ஞான, ஸம்மியக்
சாரித்திரமாகிய வியவஹார நிச்சய) ரத்னத்திரய ஸ்வரூபத்தையும், தீய
மதம் - மித்தியா மதத்தினாலாகிய
பிறவித்துன்பத்தையும்,
அதற்குபாயம் தன்னை - அதற்கு மார்க்கமாகிய மித்தியாதர்சன
அஞ்ஞான விபரீத சரணத்தையும், இதமின்மை
- நன்மையில்
லாததனையும், மனத்துள் - மனதில், வைத்தான் -
இருத்தினான்
(அதாவது : இந்த ஸம்ஸார தத்காரண மோட்ச தத்காரணங்களையும்
தியானித்தான்), எ-று.
|