வைசயந்தன் முத்திச்சருக்கம் 37


 

இராநின்றவைகளிற்   பிறப்பனவாம்  (அதாவது:   மஹாமஸ்யங்களும்
ஆடவர்களும் ஏழாநரகபரியந்தமும்,  ஸ்திரீகள் ஆறாநரகபரியந்தமும்,
சதுஷ்பாத    ஜீவன்கள்    ஐந்தாநரகம்    வரையிலும்,    ஸர்ப்பம்
முதலியவைகள் நான்காம் நரகம் வரையிலும், பறவை முதலியவைகள்
மூன்றா நரகம் வரையிலும், ஆமை முதலியவைகள் இரண்டாம் நரகம்
வரையிலும்,   ஓணான்   முதலியவைகள்  முதல்  நரகம் வரையிலும்
பிறப்பனவாம்;  இவை),   கீழ்செல்லா   -   இப்பொழுது   சொன்ன
கிரமங்களுக்குக்     கீழே     செல்லமாட்டா,     மேற்சொல்லும் -
ஒன்றிற்கொன்று  மேற்பட்டவைகளிலேயே  பிறக்கும், மேல் நான்கு -
முதல்  நான்கு  நரகங்களினின்றும்  வரும்  ஜீவன்களில்  மனிதராகப்
பிறப்பவை, வீடு ஆம் - கர்மக்ஷயம் செய்து மோக்ஷத்தையடைந்தாலும்
அடையும்,   (மற்ற   மூன்றிலுமிருந்துவரும்  ஜீவன்கள்)  முறையே -
கிரமமாக, தவம்  விரதம்  விலங்கு  ஆம் - தவத்திலும் விரதத்திலும்
விலங்கினும் சார்வனவாம் (அதாவது : ஐந்தாம் நரகத்தினின்றும் வரும்
ஜீவன்களின் மனிதராய்ப் பிறப்பவை  தவம்கொண்டாலும்  கொள்ளும்,
கர்மக்ஷயம் செய்யமாட்டா; ஆறாம்  நரகத்தினின்றும் வரும் ஜீவன்கள்
மனிதர்களாகவாவது    விலங்குகளாகவாவது    பிறந்து     ஏகதேச
விரதங்களை    ஸ்வீகரித்தாலும்   ஸ்வீகரிக்கும்,   தபம்சேரா; ஏழாம்
நரகத்தினின்றும் வரும்  ஜீவன்கள் விலங்குகளாகவே  பிறப்பனவாம்),
எ-று.                                                  (78)

 79. இந்திய மொன்றினா லுலக மெங்குமா
    மைந்தினா னாளிகை யகத்து வாழுமே
    யந்தினோ டிரண்டரைத் தீப மாழிமூன்
    றிந்திய நான்குமூன் றிரண்டி னெல்லையே.

     (இ-ள்.) இந்தியமொன்றினால்  -  ஏகேந்திரிய  ஜீவன்களினால்,
உலகமெங்குமாம் -  இந்த  உலகமாகிய  முந்நூற்று நாற்பத்து மூன்று
ரஜ்ஜுப்   பிரமாணமுமாக  நின்றது,   ஐந்தினால்  -   பஞ்சேந்திரிய
ஜீவன்களால்,  நாளிகையகத்து   -   த்ரஸநாளிகைக்குள்,  வாழும் -
வாழாநிற்கும்,    அந்தினோடு     -    அந்தியத்தில்    இராநின்ற
ஸ்வயம்புரமணார்த்தத்வீபத்தோடு,  இரண்டரைத்தீபம்  -  இரண்டரை
த்வீபமும்,    ஆழிமூன்று     -     மகாலவண,       காளோதக,
ஸ்வம்புரமணமென்னும்   மூன்று  சமுத்திரங்களும்,  இந்தியநான்கு -
சதுரிந்திரிய     ஜீவன்களினுடையவும்,   மூன்று   -     த்ரீந்திரிய
ஜீவன்களினுடையவும், இரண்டின் -  த்வீந்திரிய  ஜீவன்களுடையவும்,
எல்லை - பிறப்பு ஸ்தானங்களாம், எ-று.                     (79)

 80. இரண்டரைத் தீவினுண் மனித னாங்கண்டந்
    திரண்டநூற் றெழுபதிற் றிரு வறத்தனா
    முரண்கெடக் குலங்களோர் மூன்றிற் றோன்றினாற்
    றிரண்டதீ வினையாடச் சித்தி யெய்துமே.