னுரையுணா வகையிற் பின்னா ளக்கர
விடத்திற் பாவ
நிரையினா லுதயஞ் செய்ய நின்றிடுந் துன்ப மென்றான்.
(இ-ள்.)
(அவ்வாறு பாவனை செய்த பின்பு), இரதனாயுதனை -
தன் புத்திரனாகிய இரத்தினாயுத
குமாரனை, கூவி - அழைத்து,
வேந்தன் - வஜ்ராயுத மகாராஜன், முடியினை
- பட்டாபிஷேக
முடியை, ஈந்து - அவனுக்குக் கொடுத்து,
(அவனை நோக்கிப்
புத்திரனே!), விரமனா - (தத்துவந்தெளிந்து),
வைராக்கியத்தில்
பொருந்தாத, மனத்தனாகி -
மயக்கமுற்ற மனதுடையவனாகி,
வேட்கையின் - மோஹராகத்தில், வீழ்ந்து
போகின் - சேர்ந்து
சென்றால், உரையுணா வகையில் - சொல்ல முடியாத தன்மையில்,
பின்னாள் - பின்னாளில்,
அக்கரவிடத்தில் - பெரிதாகிய
விஷம்போல, பாவம் - பாபகர்மமானது,
நிரையினால் -
வரிசைக்கிரமத்தால், உதயஞ்செய்ய - உதயத்தைக் கொடுக்க,
துன்பம்
- துக்கமானது, நின்றிடும் - ஆத்மனிடத்தில் நின்று
வருத்தும்,
என்றான் - என்று போதித்தான், எ-று. (45)
794. திருமலி யார மாலை திளைக்குந்திண் புயத்த ராகி
யுருமலி களிற்றி னுச்சி யோங்கிய குடையி னீழல்
வருமவர் முன்பு தாஞ்செய் நல்வினை மாய்ந்த போழ்தி
னெரியுறு திருவி னொன்னார்க் குழையரா யியல்வர் கண்டாய்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லிப் பின்னரும்), திரு - அழகினால்,
மலி - நிறைந்த, ஆரம் - (முத்தாஹார, இரத்தினாஹார முதலாகிய)
ஹாரங்களும், மாலை - (பூமாலை, பொன்
மாலை முதலிய)
மாலைகளும், திளைக்கும் - சேர்ந்து
பிரகாசிக்கின்ற, திண் -
கெட்டியாகிய, புயத்தராகி -
புஜத்தையுடையராகி, உருமலி -
ரூபம்மிகுந்த, களிற்றினுச்சி -
யானையின்பேரில், ஓங்கிய -
பெரிதாகிய, குடையினீழல் - வெள்ளைக் குடையினுடைய நிழலிலே,
வருமவர் - ஏறி உலாவருமவர்களும், முன்பு - பூர்வத்தில், தாம்
செய்
- தாங்கள் செய்த, நல்வினை - புண்ணியவினை, மாய்ந்த
போழ்தில்
- உலர்ந்த காலத்தில், எரியுறு - அக்னியையடைந்த,
திருவின் -
ஐஸ்வரியம்போல, ஒன்னார்க்கு - பகைவர்களுக்கு,
உழையராய் -
வேலைக்காரர்களாகி, இயல்வர் - செல்வார்கள், கண்டாய் - இதனை
நீ பார்த்திருக்கின்றாய், எ-று. (46)
795. பஞ்சநல் லமளி யின்கட் பருமணிப் பவழத் தின்காழ்
மஞ்சின்மே லஞ்சொ லார்கள் வருடமா போற்று யின்றார்
முன்புதாஞ் செய்த தீமை முளைத்துழிக் கணத்தின் வேறாய்த்
துஞ்சினார் போல மாலைத் துகணிலத் துறைவர் கண்டாய்.
(இ-ள்.) பஞ்ச -
1ஐந்துவிதமான, (அதாவது : ஐவகை
வஸ்துக்களால் செய்யப்பட்ட), நல் - நன்மையாகிய, அமளியின்கண் -
படுக்கை மெத்தையி
|