376மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   சக்கரா யுதனும் பின்னைத் தடவரை முடியைச் சார்ந்து
   சுக்கிலத் தியானந் தன்னால் வினையிரு டூர்க்க லுற்றான்.

   (இ-ள்.)  (அதன்மேல்),    திக்கயமலையைப்போல  -   திக்கஜ
பர்வதங்களைப்  போல (அதாவது :  திக்கஜ பர்வதங்கள் பெரிதாகிய
மகம்மேரு பர்வதத்தின் சமீபத்தில் சூழ்ந்திருப்பதுபோல்), சின்னாள் -
சிலகாலம்,   (ஆச்சாரியரோடு    கூடி,   வர்த்தித்து),   சிந்தனை -
தியானத்தை,   திருத்தி    -     செம்மைப்படுத்தி,    அர்க்கன் -
ஸூர்யனானவன்,   வந்து - கிழக்கில் வந்து, உதயத்துச்சி - உதயகிரி
சிகரத்தில்,     அடைவதேபோல்  -  சேர்ந்து   பிரகாசிப்பதுபோல,
சக்கராயுதனும்   -  சக்ராயுத  முனியும்,  பின்னை  - பிறகு, வந்து -
சங்கங்களினின்றும்   தனியாகிவந்து,  தடவரை  - பெரிதாகிய  ஒரு
பர்வதத்தினுடைய,   முடியை   -   உச்சியை, சார்ந்து -  அடைந்து,
சுக்கிலத்    தியானந்தன்னால்  -   சுக்கிலத்தியான    ஜோதியால்,
வினையிருள் -  கர்மங்களாகிய  அந்தகாரத்தை,   தூர்க்கலுற்றான் -
செறுத்தலைப் பொருந்தினான், எ-று. (55)

 804. வரிசையிற் சுருக்கி வையத் துச்சியார் வடிவு தன்னைப்
      புருவத்தி னிடையின் மூக்கி னுனியிற்றான் பொருந்த வைத்துத்
      திரிவித யோகி னோடுஞ் சென்றுவந் தாடுஞ் சிந்தை
      யுருவமற் றிதனை யுன்ன வினைகளே ழுடைந்த வன்றே.

    (இ-ள்.)   (அவ்வாறு    பொருந்தியவன்),       வரிசையில் -
தியானத்தினது    வரிசையால்,    சுருக்கி   -   (பந்த ஹேதுவாகிய
பரிக்கிரகங்களை யெல்லாம்)  குறைத்து (அதாவது : திரிகுப்தியோடுங்
கூடி இந்திரியங்களை   விஷயங்களில்  செல்லவொட்டாமல்  தடுத்து,
ஹேயஸ்வரூபத்தியாகஞ்  செய்து),   வையத்து  -  இவ்வுலகத்தினது,
உச்சியார்  -     அக்கிரபாகத்தில்    ஸித்திபெற்றிராநின்ற   ஸித்த
பரமேஷ்டிகளுடைய,  வடிவுதன்னை  -  ஸ்வரூபமான  சுத்தாத்துமத்
தன்மையை, புருவத்தினிடையின் -  இரண்டு புருவங்களின் மத்தியில்,
மூக்கின் நுனியில் - நாசியின் அக்கிரபாகத்தில், பொருந்த வைத்து -
பொருந்தும்படியாக ஸ்தாபித்து,  தான் - தான், திரிவிதயோகினோடும்
- மனவசன  காயமென்னும்  மூன்றுவித  யோகத்தோடு,  சென்று  -
உயர்ந்த   மார்க்கத்திற்போய்,    (மற்ற    பந்த   ஹேதுக்களாகிய,
மித்தியாத்துவ, அவிரத, பிரமாத,  கஷாயமென்னும், பிரத்தியயங்களை
விடுத்து), உவந்து -  (ஆத்மபாவனையில்)  சந்தோஷித்து,  ஆடும் -
அலைகின்ற,  சிந்தை  -  சிந்தையின்,  உருவமற்று  -   வடிவமற்று
(அதாவது : ஏகசிந்தையாய்  ஸ்வஸம்  வேதனஞான தியானத்தினால்),
இதனை -  உபாதேயரூபமாகிய  ஸித்தஸத்ரஸ  நிச்சய ரத்தினத்திரய
ஸ்வரூபமாகிற)  இந்த  ஸ்வஸமயத்தை,  உன்ன - (நிர்விகல்பவீதராக
பரிணதனாகி)  பாவிக்க,  வினைகளேழ்  - (தர்சன மோஹனீயமாகிய)
1ஸப்த பிரகிருதி கருமங்கள், உடைந்த - கெட்டன, எ-று.

        (56) 1ஸப்த பிரகிருதிகள் - மித்தியாத்துவம், ஸம்மியக்துவம்,
ஸம்மியக்  மித்தியாத்துவ  பிரகிருதி, அனந்தானு பந்திகுரோத, மான,
மாயா, லோபமென்ற ஏழுமாம்,