(இ-ள்.) இரண்டரைத்தீவினுள் - (ஜம்பூ, தாதகி, புஷ்கரார்த்த
மென்னும்) இரண்டரைத்வீபத்துள், மனிதனாம் - மனிதன் பிறப்பான்,
(அதிலும்), கண்டம் - கண்டங்களாக, திரண்ட - சேர்க்கையாகிய,
நூற்றெழுபதில் - நூற்றெழுபது தர்ம கண்டங்களில், திருவறத்தனாம் -
ஸ்ரீஜிந தர்மத்தையுடையவன் பிறப்பான்; (அவன்) முரண்கெட - பாபங்கள்கெட, குலங்களோர் மூன்றில் (பிரம்ம, க்ஷத்திரிய,
வைசியரென்னும்) முக்குலங்களில், தோன்றினால் - பிறந்தால், திரண்ட
- ஆத்மனிடத்தில் சேர்ந்திரா நின்ற, தீவினை - கருமங்களை, அடா -
ஜெயித்து, சித்தியெய்தும் - மோட்சத்தை அடைந்தாலும் அடைவான்,
எ-று. (80)
81. குடங்கையில் விளக்கெனக் கொண்ட கொண்டதன்
னுடம்பின தளவுமா முலக மெங்குமா
மொடுங்குழி புரைதரங் கில்லை யோங்கிய
விடங்கொளிற் பிளத்தலு மின்ற மூர்த்தியால்.
(இ-ள்.) அமூர்த்தியால் - சீவன் அமூர்த்தஸ்வபாவமானதால்,
குடங்கையில் - உள்ளங்கையில் வைத்து மூடப்பட்ட, விளக்கென -
தீபத்தைப்போல, கொண்டகொண்டதன் - எடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட
தன்னுடைய, உடம்பினது - சரீரத்தினது, அளவுமாம் -
பிரமாணமுடையதுமாகும், உலகமெங்குமாம் - கேவலிஸ முத்காதம்
பண்ணும் தண்ட, கவாட, பிரதர, பூர்ணைகளினால், பூர்ணையின்கண்
லோக முழுமையும் ஒரேசீவன் ஸூக்ஷ்மகாய யோகத்தினாலும்
ஆகாநின்றது, ஒடுங்குழி - சீவன் சிறிதாகிய சரீரத்தை
யெடுக்குமிடத்தில், புரைதரங்கில்லை - மடிப்பாகச் சுருங்கியிருக்கிறது
மில்லை, ஓங்கிய விடங்கொளில் - பெரிதாகிய சரீரத்தை
யெடுக்குமிடத்தில், பிளத்தலுமின்று - விண்டுவிரிந்து
இருக்கிறதுமில்லை,
எ-று.
சப்தசமுத்காதங்களில் கேவலி சமுத்காதம் ஒன்று; இந்த
சமுத்காதங்களின் விவரங்களை பதார்த்தசார கிரந்தத்தில் முப்பதாவது
அதிகாரத்தில் பார்த்துக்கொள்க. (81)
82. பொறிகளாற் புலத்தெழு போகந் துய்ப்புழி
யிறுகிய வினைகளுக் கிறைவ னாயபின்
பிறிதொரு பிறப்பினவ வினைப் பயத்தினுக்
கிறைவனா மிதுவுயி ரியற்கை வண்ணமே.
(இ-ள்.) உயிர் - சீவபதார்த்தமானது, பொறிகளால் -
இந்திரியங்களால், புலத்து - விஷயங்களில், எழும் - உண்டாகிய,
போகம் - போகோப போகங்களை, துய்ப்புழி - (ராகத்வேஷ மோகங்களால்) அனுபவிக்குமிடத்தில், இறுகிய - அதனால்
வந்துசேரப்பட்ட, வினைகளுக்கு - கர்மங்களுக்கு, இறைவனாயபின் -
கர்த்தா வாயிருந்து பந்தித்துக்கொண்ட பிறகு, பிறிதொரு பிறப்பில் -
மறுசன்மத்திலும், |