புஷ்ப வருஷங்களை, பொழிந்து -
சொரிந்து, உலகுடை -
இந்தத்திரிலோகத்தையும் ஞானத்துளுடைய,
இறைவன் -
இந்தச்சக்ராயுத பகவானுடைய, பாதம்
- பாதங்களை, உள்ளம்
மெய்மொழியோ டொன்றி - மன வசன காயங்களோடு பொருந்தி,
நிலையிலா -
அனித்தியஸ்வரூபமாகிய,
பிறவி -
ஸம்ஸாரப்பிறப்பானது, நீங்கும் - நீங்கும்படியான,
நெறியினால் -
கிரமத்தினால், (கேட்போர் இம்முழக்கம்), அலைகடல் -
அலைகளால்
சப்திக்கும்படியான கடலானது,
முகிலோடு ஒன்றி -
மேககர்ச்சனையோடு சேர்ந்து,
முழங்குவதனையது என்ன -
சப்திப்பதையொப்ப தாகுமென்று
சொல்லும்படி, (கெம்பீரமாகிய
துவனிகளால்), துதிகள் -
ஸ்தோத்திரங்களை, சொன்னார் -
மேற்கூறியபடி சொல்லினார்கள், எ-று. (61)
811. ஆயிடை யெண்பத் தஞ்சு வினைகெட்ட
வக்க ணத்தே
போயுல குச்சி புக்கான் பொருந்தியெண்
குணங்க ளோடுந்
தூயவான் மலர்சொ ரிந்து துதித்துட
னமரர் போனார்
மாயமி றவத்தி னான்வச் சிராயுதன்
வணங்கிப் போனான்.
(இ-ள்.) ஆயிடை
- அப்பொழுது, எண்பத்தஞ்சுவினை -
எண்பத்தைந்தாகிய அகாதிகருமங்கள், கெட்ட -
சக்ராயுதபகவானை
விட்டு நீங்கின,
அக்கணத்தே
- ( அவ்விதமாக
சுத்தோபயோகதியானத்தால் ஸமயஸார லாபமடைந்த) அப்பொழுதே,
எண் குணங்களோடும் - அனந்த ஞானாதி அஷ்டகுணங்களோடும்,
பொருந்தி - சேர்ந்து, போய் - (சரீரம்நீங்கி
ஊர்த்துவகதிஸ்வ
பாவனாய்) சென்று, உலகுச்சி - மூன்றுலோகத்திற்கும்
உச்சியாகிய
ஸித்திக்ஷேத்திரத்தை, புக்கான் - சக்ராயுதபகவான்
அடைந்தான்,
(அப்பொழுது,) தூய - பரிசுத்தமாகிய,
வான் - சிறந்த, மலர் -
புஷ்பங்களை, சொரிந்து - வருஷித்து, துதித்து
- (பரிநிர்வாண
பூஜைசெய்து) ஸ்தோத்திரம் பண்ணி, உடன் -
உடனே, அமரர் -
சதுர்நிகாய தேவர்களும், போனார்
- தங்கள் தங்களிடம்
சென்றார்கள், மாயமில் -
மாயாச்சாரமில்லாத (அதாவது :
உண்மையாகிய), தவத்தினான் - தபஸையுடையவனான, வச்சிராயுதனும்
- வச்சிராயுத மஹாமுனிவரனும்,
வணங்கி - (பரிநிர்வண
பூஜாகாலத்தில் சக்ராயுதபகவானை) தொழுது,
போனான் - பிறகு
தான் ஏகவிஹாரியாகித் தபோவனத்திற் சென்றான், எ-று. (63)
812. வணிகனாய்த் தரும மேவி மன்னனாய்
மாத வத்தா
லிணையிலாக் கேவச் சத்து ளமரனா யிங்கு
வந்து
தணிவிலாத் தவத்தின் மாற்றை யெறிந்துசக்
கராயு தன்போ
யிணையிலா வுலகம் புக்கா னிதுவறத் தியற்கை யாமே.
(இ-ள்.) வணிகனாய்
- பூர்வம் பத்திரமித்திரனென்னும்
வணிகனாயிருந்து, தருமம் - (தான முதலாகிய சிராவக) தருமத்தை,
மேவி - பொருந்தி, மன்னனாய் -
|