வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 383


 

    றிரையு டுத்தவிப் படிமி சைத்தன
    தரசு நிற்பதே யாக வெண்ணுமே.

     (இ-ள்.) விரைசெய்   -   வாசனையை  வீசுகின்ற,  தாரவன் -
மாலையை  யணிந்திராநின்ற   இரத்தினாயுத வரசனானவன், அரசும் -
இராஜ்யமும்,   இன்பமும்   - ஸௌக்கியமும்,   கிளையும்   - பந்து
ஜனங்களும்,   ஆயுவும்    - ஆயுஷ்யமும், வீயுமென்று - நாசத்தை
யடையுமென்று,    எணான் -   நினைக்காதவனாகி,   திரையுடுத்த -
ஸமுத்திரஞ்    சூழ்ந்த,    இப்படிமிசை    - இப்பூமிமேல், தனது -
தன்னுடைய, அரசு - ராஜ்யமானது, நிற்பதேயாக - ஸ்திரமான நித்திய
ஸ்வரூவத்தையுடையதாகவே,   எண்ணும்   - நினைப்பவனாயினான்,
எ-று.                                                  (3)

816. பொறியின் போகமும் புண்ணி யத்தின்வந்
    துறுவ தென்றெணா னும்ப ரின்பமும்
    மறுவில் வீடுமற் றில்லை மாய்ந்தவர்
    பிறவி யும்மிலை யென்று பேசுமே.

     (இ-ள்.)   பொறியின்    போகமும்,    (இந்த     ஸம்ஸாரப்
பிறப்பிலுண்டாகும்)   இந்திரிய    விஷய  சுகமும், புண்ணியத்தின் -
சுபோபயோக    புண்ணியத்தினால்,   வந்து  - ஆஸ்ரவமாகி வந்து,
உறுவதென்று   -    பந்தித்து  நின்று உதயத்தைக் கொடுப்பதென்று,
எணான் - நினைக்காதவனாகி, உம்பரின்பமும் - தேவ சௌக்கியமும்,
மறுவில் -   குற்றமில்லாத   (அதாவது :   பந்த குணமற்ற), வீடும் -
மோட்சமும்,   இல்லை   -     மாய்ந்தவர்    -   (இவ்வுலகத்தில்)
இறந்துபோனவர்கள்,  பிறவியும் - மறுபடியும் பிறக்கின்றதும், இலை -
இல்லை, என்று - என்றும், பேசும் - சொல்பவனாயினான், எ-று.  (4)

817. கற்ற மாந்தராய்க் காமச் செல்வத்திற்
    பெற்ற வின்பத்தைப் பிழைக்க விட்டுப்போய்
    மற்று மின்பமேல் வரவ ருந்துத
    லுற்ற வூனரி விட்ட தொக்குமே.

     (இ-ள்.) கற்றமாந்தராய் - ஞான சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட
மனுஷ்யர்களாகி,   காமசெல்வத்தில்  -  இப்போது அழகிய ஐஸ்வரிய
முதலான  பலசாதனங்களால், பெற்ற - அடைந்திருக்கின்ற, இன்பத்தை
- சௌக்கியத்தை, பிழைக்கவிட்டு - தவறுதலாக நீக்கிவிட்டு, போய் -
தபஞ்செய்கிறேனென்று   போய்,   மற்றும்  - பின்னையும், இன்பம் -
சௌக்கியமானது,   மேல்   -    இனிமேல், வர - அடையும்படியாக,
வருந்துதல் - வருத்தப்படுவதானது, (எப்படியாகின்ற தென்றால்), நரி -
ஒரு நரியானது, (ஜலத்தில் கண்ட மஸ்யத்தை இரையாக அடை