386மேருமந்தர புராணம்  


 

நெருப்பு   - தேஜஸ்காயமும்,  காற்று - வாதகாயமும், என்ற - என்று
சொல்லப்பட்ட,   இக்காயமைந்து   -    இந்த    ஐந்து   விதமான
காயங்களையும்,  எய்தி - அடைந்து, வாழும் - வாழ்வனவாகும், எ-று.

     ‘என்றிக்காயம்" என்பதில் அகரந்தொக்கது.               (10)

823. நந்து சிப்பிசங் காதி நாவன
    குந்தெ றும்புகோ பாதி மூன்றன
    வந்து தும்பிவண் டாதி நாலவைந்
    திந்தி யம்பசுநரர் நரகர் தேவராம்.

     (இ-ள்.)  நந்து - நத்தையும், சிப்பி - சிப்பியும், சங்கு - சங்கும்,
ஆதி  - முதலாகவுள்ளவைகள், நாவன - ரஸனேந்திரியத்தையுமுடைய
த்வீந்திரிய  ஜீவன்களாகும்,   குந்து   -  கிந்தி நடக்கின்ற, எறும்பு -
எறும்பினங்களும்,  கோபாதி  -  பட்டுப்பூச்சி முதலாகிய இனங்களும்,
மூன்றன  -  த்ரீந்திரியத்தையுடைய  ஜீவன்களாகும், அந்து - அந்தும்,
தும்பி    -  தும்பிகளும், வண்டு ஆதி - வண்டு முதலாகியவைகளும்,
நால     -  (ஸ்பரிச,      ரஸ,      க்ராண,      சக்ஷுவென்னும்)
சதுரிந்திரியங்களையுடைய   ஜீவன்களாகும், பசு - பசுக்களும், நரர் -
மனுஷ்யர்களும், நரகர் - நாரகர்களும், தேவர் - தேவர்களும், (ஆகிய
ஜீவன்கள்),  ஐந்திந்தியம், - பஞ்சேந்திரிய ஜீவன்கள், ஆம் - ஆகும்,
எ-று.                                                  (11)

824. உழுதல் கல்லுத லடைத்த லோடுகாய்
    தழல்க ளாதிமண் ணுயிர்கள் மாய்ந்திடு
    மழலை யாற்றுத லவித்த லாதியாய்த்
    தழலு டம்பன தானு மாயுமே.

     (இ-ள்.)   உழுதல்  -   பூமியை  உழுவதினாலும், கல்லுதல் -
வெட்டுவதினாலும்,   அடைத்தலோடு  - பள்ளம் முதலானவைகளைத்
தூர்ப்பதினாலும்,   காய்தழல்கள் ஆதி -    எரிக்கின்ற    அக்கினி
முதலானவைகளாலும்,    மண்ணுயிர்கள் - பிருத்வீகாய    ஜீவன்கள்,
மாய்ந்திடும் - நாசத்தையடையும் (அதாவது : மரணமெய்தும்), அழலை
- உஷ்ணத்தை,      ஆற்றுதல்    - தணித்தல்,       அவித்தல் -
அக்னியையவித்தல், ஆதி    -    முதலாகிய  தொழில்கள், ஆய் -
உண்டாவதனால்   (அதாவது :    இத்தொழில்களைச் செய்வதினால்),
தழலுடம்பனவும்    - அக்னியையே   சரீரமாக உடைய தேஜஸ்காய
ஜீவன்களும், மாயும் - மரணமடையும், எ-று.

     ‘தானும்" என்பதில், தான் - அசை.                     (12)

825. திரைய லைப்பவுந் தீயிற் காய்ச்சவுந்
    தரைந னைப்பவுஞ் சாங்க ணீருயிர்