வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 389


 

வேறு.

831. இப்ப டிவிலங் கிற்பிறப் பார்கடா
    மெப்ப டிப்பட் டவரென் றியம்பிடின்
    மெய்ப்ப டத்துற வாது விழுத்தவத்
    தொப்பின் மாயத்தி னோடுழல் வார்களும்.

     (இ-ள்.) இப்படி   -  இப்பிரகாரமாக,  விலங்கில்   - விலங்கு
ஜாதியில்,  பிறப்பார்கள் தாம் - பிறக்கப்பட்டவர்கள், எப்படிப்பட்டவர்
- எப்படிப்பட்ட குணத்தையுடையவர்கள், என்று - என்று,  இயம்பிடில்
- சொல்லுமிடத்தில்,   மெய்ப்பட    -     உண்மையாக, துறவாது -
பாகியாப்பியந்தர    பரிக்கிரகங்களை    மனதிற்றுறவாமல், ஒப்பில் -
உவமையில்லாத,   விழு   - பெரிதாகிய, தவத்து - தபோவேஷத்தில்,
மாயத்தினோடு     -    மாயாச்சாரத்தினோடு,     உழல்வார்கள் -
செல்பவர்களே, எ-று.

     உம் - அசை.                                      (19)

832. மோக மோடுமிச் சோதயத் தாலுமற்
    றேக மாதிநான் கில்விலங் காயிடுங்
    காக மேயன காரிகை யார்மனத்
    தாகு மாயம் விலங்கினை யாக்குமே.

     (இ-ள்.)  (இன்னும்   ஜீவன்கள்), மோகமோடு - தீவிரதரமாகிய
சாரித்திர   மோஹனீய கஷாயோதய பரிணாமத்தோடு, மிச்சு - தர்சன
மோஹனீயமாகிய   மித்தியாத்துவப்    பிரகிருதியின், உதயத்தாலும் -
உதயத்தினாலும்  (அதாவது :மித்தியாத்துவ ஒளதயிக பாவத்தினாலும்),
ஆதி    -   திரியக்கதிக்கு   முதலாகிய, ஏகம் - ஏகேந்திரியத்திலும்,
(அதுவல்லாமல்   முன்   சொன்ன  கஷாய மித்தியாத்துவம் என்னும்
மோஹனீயப் பிரகிருதிகளின் மந்தமத்திமதர ஒளதயிக பரிணாமத்தால்),
நான்கில்      -    (த்வீந்திரியம்,    த்ரீந்திரியம்,     சதுரிந்திரியம்,
பஞ்சேந்திரியமென்னும்     இந்த)     நான்கிலும்,    விலங்காயிடும்
பரிணாமானுஸாரப்படி     திரியக்காக    ஜனிக்கும், (அதுவல்லாமல்),
காகமேயன    - காகத்துக்குச் சமானமாகிய (அதாவது ஸ்திரமில்லாத),
காரிகையார்    - ஸ்த்ரீமார்களுடைய,  மனத்து  - மனதில், ஆகும் -
உண்டாகின்ற,   மாயம்   -    மாயாச்சாராமானதும்,  விலங்கினை -
விலங்குஜாதிப்    பிறவியை,      ஆக்கும்    -   உண்டுபண்ணும்,
எ-று.                                                  (20)

833. உள்ளம் மெய்ம்மொழி யொன்றுத லுமிலா
    வெள்ளை மாந்தரும் வீழ்வர் விலங்கிடைத்
    தள்ள வாரஞ்செ யாத்தனந் தேடுமக்
    கள்ள நெஞ்சினர் வீழ்கதி யும்மிதே.