அவ்வினைப்பயத்தினுக்கு - அந்தக் கர்மங்களினுடைய உதயமாகிய
பலனை அனுபவிப்பதற்கு, இறைவனாம் - போக்தாவாகி
அனுபவியாநிற்கும், இது - இந்தச் செய்கை , இயற்கை - அந்தச் சீவ பதார்த்தத்தினுடைய ஸ்வரூபமாகிய, வண்ணம் - குணமாம், எ-று. (82)
வேறு.
83. நாற்றமுஞ் சுவையு மூறும் வண்ணமுந் தன்மைத் தாகிப்
போற்றல்பூ ரித்தல்வாட லுடையதாப் புற்க லந்தான்
மாற்றிடை யுயிரைப் பற்றி வினைமுத லாகித் துன்ப
மாற்றவும் செய்து கந்த மணுவுமாய் நிற்ப தாமே.
(இ-ள்.) புற்கலந்தான் - புத்கலமானது, நாற்றமும் -
கந்தத்தையும், சுவையும் - ரஸத்தையும், ஊறும் - ஸ்பரிசத்தையும்,
வண்ணமும் - வர்ணத்தையும், தன்மைத்தாகி - தன்னுடைய
ஸ்வபாவத்தில் அல்லது நிச்சயத்தினாலுடையதாகி, போற்றல் -
கூடுவதும், பூரித்தல் - நிரம்புவதும், வாடல் - பிரிவதும் (ஆகிய
இவைகளை), உடையதா - பரியாயத்தால் அல்லது
வியவகாரத்தாலுடையதாகி, மாற்றிடை - ஸம்சாரத்தில் வர்த்தியா
நின்ற, உயிரை - ஸம்சார சீவன்களை, பற்றும் - பிணிக்கின்ற,
வினைமுதலாகி - (ஞாநாவரணாதி அஷ்டகர்மங்களுக்குக்)
ஆதாரமாகி, துன்பம் - துக்கங்களை, ஆற்றவும் - மிகவும், செய்து -
உண்டு பண்ணி, கந்தம் - ஸ்கந்தங்களாகவும், அணுவுமாய் -
அணுக்களாகவும் ஆகி, நிற்பதாம் - இருப்பதாகும், எ-று.
கந்தம் இரண்டு; சுவை ஆறு; பரிசம் எட்டு; வர்ணம் ஐந்து. (83)
வேறு.
84. நுண்மையு நுண்மையு நல்ல நுண்மையு
நுண்மையிற் பருமையும் பருமை நுண்மையு
மெண்ணரும் பருமையு மிரு பருமையுங்
கண்ணுறு மணுவினா றாகுங் கந்தமே.
(இ-ள்.) கந்தம் - ஸ்கந்தமானது, நுண்மையு நுண்மையும் -
ஸூக்ஷ்ம ஸூக்ஷ்மமும், நல்ல - நன்மையான, நுண்மையும் -
ஸூக்ஷ்மமும், நுண்மையிற் பருமையும் - ஸூக்ஷ்ம ஸ்தூலமும்,
பருமை நுண்மையும் - ஸ்தூல ஸூக்ஷ்மமும், எண்ணரும் -
நினைத்தற்கரிய, பருமையும் - ஸ்தூலமும், இருபருமையும்,
ஸ்தூலஸ்தூலமுமென்று, கண்ணுறும் - கருதப்பட்டிருக்கிற, அணுவின்
- பரமாணுவினாலே, ஆறாகும் - ஆறுவிதமாகும், எ-று. (84) |