394மேருமந்தர புராணம்  


 

முனிவன்  தன்னை   - வஜ்ரதந்த   முனிவானை, கண்டு  - பார்த்து,
அடிபணிந்து  -   அவனுடைய   பாதத்தில் வணங்கி, சொன்னான் -
(யானைக் குற்றத்தைக்) கூறினான், எ-று.                     (30)

843. மகரயாழ் வல்ல மைந்த னொருவனைக் கண்ட மற்றப்
     புகர்முகக் களிற்றின் மன்னன் முனிவனை வணங்கிப் பின்னை
     சிகரமால் யானைக் குற்ற தருளுக வென்று செப்ப
     நிகரிலாப் போதி யாற்பார்த் தரசநீ கேண்மோ வென்றான்.

     (இ-ள்.) (அவ்வாறு  சொல்லிப் பின்னரும் அவன்), மகரயாழ் -
மகரயாழென்னும்   வீணை வாத்தியத்தில்,    வல்ல    - கைதேர்ந்து
வாசிக்கச்   சாமர்த்தியமுள்ள,  மைந்தன் ஒருவளை - ஒரு குமாரனை,
கண்ட   - பார்த்த,  புகர்முகம் - புள்ளி பொருந்திய முகத்தையுடைய,
களிற்றின்    -    யானையைப்போல   (அதாவது :        சரியான
வீணாகானத்தினால்  யானை  சந்தோஷமடைந்து ஒருவனுக்கு வசமாகி
ஏவல்    செய்வது   போல), மன்னன் - இவ்வரசனும், முனிவனை -
வரஜ்தந்த  முனிவரனை, வணங்கி - நமஸ்கரித்து (ஸந்தோஷமடைந்து),
சிகரம்   - பர்வதம் போன்ற, மால் - பெரிதாகிய, யானைக்கு - எனது
பட்டத்துயானைக்கு,    உற்றது    -    நேர்ந்ததை,     அருளாக -
சொல்லியருள்வாயாக,    என்று    செப்ப என்று சொல்ல, நிகரிலா -
உவமையில்லாத, (அதாவது :    உத்கிருஷ்டமாகிய),    போதியால் -
அவதிஜ்ஞானத்தால்,    பார்த்து    - அம்முனிவான்  ஆலோசித்துப்
பார்த்தறிந்து,    அரச    -  வாராய்ராஜனே!, நீ கேண்மோ - (நான்
சொல்லப்போவதை)    நீ    கேட்பாயாக, என்றான் - என்று மேலும்
சொல்லத்தொடங்கினான், எ-று.                             (31)

844. மற்றிந்தப் பரதத் தின்க ணத்தின புரத்தின் மன்னர்
    பெற்றியாற் பெரிய மன்னன் பிரதிபத் திரனென் பானாம்
    வெற்றிவேல் வேந்தன் றேவி வசுந்தரி விலங்கல் போலுங்
    கற்பினாள் புதல்வன் பிரிதி கரனென்பா னொருவ னானான்.

     (இ-ள்.) (அவ்வாறு   சொல்லத்  தொடங்கியவர் அம்மன்னனை
நோக்கி),   இந்தப்  பரதத்தின்கண்  - இந்தப் பரத க்ஷேத்திரத்திலே,
அத்தினபுரத்தின் - அஸ்தினாபுரத்தினது, மன்னர் பெற்றியால் - அரசர்
தன்மையினாலே,      பெரிய      - உயர்ந்தவனாகிய,   மன்னன் -
இராஜனானவன்,  பிரிதிபத்திரனென்பானாம்   - ப்ரீதிபத்திரனென்னும்
பெயருடையவனாகும்,       வெற்றி      -   வெற்றிபெற்ற, வேல் -
வேலாயுதத்தைக் கையிற்றரித்த, வேந்தன் - அவ்வரசனுடைய, தேவி -
பட்டத்தரசியானவள்,    விலங்கல்போலும் -  பர்வதம்போற் சலியாத,
கற்பினாள்      - பதிவிரதா     குணமுள்ளவளாகிய,    வசுந்தரி -
வஸுந்தரியென்னும்        பெயருடையவளாகும்,    புதல்வன்    -
அவ்விருவருக்கும் புத்திரன், பிரதிகரனென்பான் - ப்ரீதிங்கரனென்