வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 395


 

னும்   பெயரினையுடையவனான,  ஒருவன்  -  ஒருத்தன், ஆனான் -
உண்டாயினான், எ-று.                                    (32)

845. சித்திர மதியென் பானாம் மந்திரி துணைவி தீஞ்சொல்
     முத்தணி முறுவற் செவ்வாய்க் கமலையாங் கமலை யொப்பாள்
     வித்தகப் புதல்வன் றானும் விசித்திர மதியென் பானாம்
     மத்தமால் களிற்று வேந்தன் மகனுக்கன் றொருவ னானான்.

     (இ-ள்.)     மந்திரி       -      அவ்வரசனுக்கு    மந்திரி,
சித்திரமதியென்பானாம்  - சித்திரமதி யென்னும் பெயருடையவனாகும்,
துணைவி   -  அவனது மனைவியானவள், தீஞ்சொல் - தித்திப்பாகிய
வசனத்தையும்,   முத்து   -  முத்துக்களின், அணி - அழகைப்பெற்ற,
முறுவல் - பற்களையும், செவ்வாய் - சிவந்த வாயையுமுடையவளாகிய,
கமலை    யொப்பாள்     -    இலக்ஷ்மிதேவிக்குச்    சமானமாகிய
அழகையுடையாளாம்,     கமலையாம்     - கமலை       என்னும்
பெயருடையவளாகும், வித்தகம் - சாமர்த்தியமுடைய, புதல்வன்தானும்
- (இவ்விருவருக்கும்    புத்திரனானவன், விசித்திரமதியென்பானாம் -
விசித்திரமதியென்னும்  பெயருடையவனாகும், (இவன்), மத்தம் - மதம்
பொருந்திய,    மால்    -  பெரிதாகிய, களிற்று - யானையையுடைய,
வேந்தன்     - அரசனது,   மகனுக்கு    - புத்திரனாகிய  ப்ரீதிங்கர
குமாரனுக்கு,    ஒருவனானான்     -   ஒப்பற்ற  சினேகிதனானான்,
எ-று.                                                  (33)

846. அருமணி யார மார்ப ரிருவரு மனங்க னன்னார்
     மருவிய புலத்துச் சிந்தை மாசுண மன்ன நீரார்
     தருமநல் லுருசி யென்னுஞ் சாதுவின் பாதஞ் சேர்ந்து
     திருவற மருளக் கேட்டோர் புலங்கண்மேல் வெறுப்புச் சென்றார்.

     (இ-ள்.)   (அவ்வாறு   சிநேகிதனாயிருக்கும்போது),  அரும் -
அரிதாகிய,   மணி   - முத்துமணி இரத்தினமணிகளாலாகிய, ஆரம் -
மாலைகளை    யணிந்த,    மார்பர்   -  மார்பையுடையவர்களாகிய,
அனங்கனன்னார்   இருவரும்   -  மன்மதனுக் கொப்பானவர்களாகிய
இராஜகுமாரன் மந்திரிகுமாரன் ஆகிய விருவரும், சிந்தை - மனதோடு,
மருவிய   -   சேர்ந்திராநின்ற, புலத்து    -   பஞ்சேந்திரிய விஷய
காமபோகங்களில்,   மாசுண   மன்ன - ஸர்ப்பத்துக்குச் சமானமாகிய,
நீரார்     -    குணமுடையவர்களாய், (இருந்து    பின்னர்),   தரும
நல்லுருசியென்னும்   - தர்மருசியென்னும் பெயரையுடைய, சாதுவின் -
ஜினமுனிவனுடைய,    பாதம்   - பாதங்களை, சேர்ந்து  - அடைந்து,
திருவறம்  - ஸ்ரீஜின தருமத்தை, அருள - அவர் கூறியருள, கேட்டு -
கேள்வியுற்று,   ஓர்   -  ஒப்பற்ற, புலங்கல்மேல்  - இந்திரிய விஷய
போகங்களின்மேல், (உண்டாகிய), வெறுப்பு - வெறுப்பில், சென்றார் -
சேர்ந்தார்கள்,   (அதாவது :    வைராக்கியத்தை    யடைந்தார்கள்),
எ-று.                                                  (34)