847. மாற்றிடைச் சுழற்றும் மட்டிற் புலங்கண்மேன் மற்றி வற்றை
யாற்றவுந் துறக்க மாற்றின் சுழற்றிய தகலு மாகிற்
காற்றியெம் மனத்து மட்டைக் கடையிலாத் தெளிவை யாக்கு
மாற்றல்சால் துறவென் றோது மருமருந் தளிக்க வென்றார்.
(இ-ள்.) (அங்ஙன மடைந்த அவர்கள் அம்முனிவனை நோக்கி),
மட்டில் - கள்ளைப்போல் மயக்கத்தைச் செய்யும் படியான, புலங்கள்
மேல் - இந்திரிய விஷயங்களிலே, (இஷ்டம், அனிஷ்டம்,
என்பவைகளில் மெட்டில்லாமல் ராகத்வேஷங்களோடு கூடினால் அது),
மாற்றிடை - இந்த ஸம்ஸாரத்திலே, சுழற்றும் - (கள்குடித்தவன்
ஹேயோபாதேயமின்றிப் புத்தி கெட்டுச் சுழல்வது போல அவ்வாறு
கூடியவனைச்) சுழல்விக்கும், இவற்றை - இந்தப் பஞ்சேந்திரிய விஷய
ராகத்வேஷங்களை, ஆற்றவும் - மிகவும், (அதாவது : முழுதிலும்),
துறக்க - வர்ஜனை செய்ய (அதாவது : நீக்கிவிட), மாற்றின் -
ஸம்ஸாரத்தினுடைய, சுழற்றியது - சுழற்சியாகிய ஜனனமரணமானது,
அகலும் ஆகில் - நீங்கி ஆத்மன் ஸ்வஸ்தபாவத்தையடையுமானால்,
எம்மனத்து - எங்களுடைய மனதிலுண்டாகிய, மட்டை -
மதுமயக்கத்தை, (அதாவது : கள்ளைப்போல மயக்கத்தைச்
செய்யும்படியான, மனோஜ்ஞ, அமனோஜ்ஞ இந்திரிய விஷய ராக
த்வேஷங்களை), காற்றி - போக்கி, கடையிலா - முடிவில்லாத,
தெளிவை - ஹேயோபாதேய விஜ்ஞானமாகிய வறிவை, ஆக்கும் -
உண்டு பண்ணும்படியான, ஆற்றல் சால் - சக்தியில் மிகுந்த,
துறவென்று - பாஹியாப்பியந்தர பரிக்கிரக நிவர்த்தி என்று, ஓதும் -
சொல்கின்ற, அரும் - பெறுதற்கரிதாகிய, மருந்து - பரமௌஷதமாகிய
ஜினதீக்ஷையை, அளிக்க - சிக்ஷையுடன் கொடுக்கவேண்டும், என்றார்
- என்று சொன்னார்கள், எ-று. (35)
848. மாதவ னருளிச் சித்தி வருகமற் றிவர்கட் கென்னாப்
போதணி குஞ்சி வாங்கப் புணர்ந்துமா தவத்திற் சென்றா
ராதாம் பண்ணு நாமத் தரசிளங் குமரன் பாலின்
மாதிரம் பில்கு நல்ல வார்த்தைமா முனிவ னானான்.
(இ-ள்.) (அவ்வாறு சொன்னபோது), மாதவன் - தர்மருசி
முனிவரனானவன், இவர்கட்கு - இவ்விருவர்கட்கும், சித்தி -
ஸ்வாத்மோ பலப்தியாகிய ஸித்தியானது,வருக - வரக்கடவது,என்னா -
என்று, அருளி - ஆசீர்வதித்து, போதணி - புஷ்பமாலைகளணிந்த,
குஞ்சி - தலைமயிர் முதலானவைகளை, வாங்க - தபோ
*தீக்ஷாவிதியின் கிரமத்தால் பரிஹரித்து ஜினதீக்ஷையினை யருள,
மாதவத்தில் - பெரிதாகிய தபத்தில், புணர்ந்து - சேர்ந்து, சென்றார் -
இவ்விருவரும் சென்றார்கள், (அவர்களுள்), ஆதரம் பண்ணு நாமத்து
- ப்ரீதிங்கரனென்னும் பெயருடைய, அரசிளங்குமரன் -
இராஜபுத்திரனாகியவன், பாலின் - பால்போல், மாதிரம் -
மாதுரியத்தை,பில்கும் - கொடுக்கும், நல்ல - நன்மையாகிய, வார்த்தை
- (கேட்
|