வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 397


 

பவர்களுக்குப் பிரியத்தை யுண்டு பண்ணும்படியான) வசனத்தையுடைய,
மா      -      பெரிதாகிய  ரித்தியடைந்த, முனிவனானான் - மஹா
முனிவரனானான், எ-று.

*தீக்ஷாவிதி    முதலிய     விவரங்களை      யதியாச்சாரமென்னும்
கிரந்தத்தில் பார்த்துக்கொள்க.                              (36)

849.முனியிளங் களிறு போல்வார் முகிழ்முலைத் தடங்கட் செவ்வாய்
    வனிதைய ரோடும் வானோர் மடந்தையர் மகிழு மாடம்
    வினிதையின் புறத்து விட்டார் வேந்திளங் குமர னாய
    வனகமா முனிவன் புக்கா னந்நகர்ச் சரிகைக் கென்றே.

     (இ-ள்.)(அவ்வாறான பின்),முனி - வெறுப்பையடைந்த, இளம் -
இளமையாகிய, களிறுபோல்வார் -யானைக்கன்றுகளுக்குச் சமானமாகிய
இவ்விருவர்களும், முகிழ்   - தாமரை    மொக்குப்போன்ற, முலை -
ஸ்தனங்களையும்,    தடம்  - விசாலம் பெற்ற, கண் - கண்களையும்,
செவ்வாய்     -     சிவந்த   வாயையுமுடைய, வனிதையரோடும் -
ஸ்த்ரீமார்களோடு, வானோர்மடந்தையர் - தேவஸ்த்ரீகளும், மகிழும் -
சந்தோஷித்துத் தங்கும்,மாடம் -உப்பரிகைகளையுடைய, வினிதையின் -
அயோத்தியென்னும் பட்டணத்தின், புறத்து - பாஹ்யத்தில் இராநின்ற
உத்தியானத்தில்,   விட்டார் - தங்கள் பிரயாணத்தை நிறுத்தினார்கள்
(அதாவது :     அங்குவந்து தங்கினார்கள்), (அவ்வாறு தங்கியபோது),
வேந்திளங் குமரனாய - ராஜபுத்திரனாகிய,அனகம் - பாபரஹிதமாகிய,
மாமுனிவன்    - பெரிதாகிய    தபத்தையுடைய ப்ரீதிங்கர முனிவன்,
சரிகைக்கென்று - (இல்வாழ்க்கையையுடைய விசுத்த வம்சத்தினர் எதிர்
கொண்டழைத்து    ஆஹாரம்    கொடுப்பார்களேயானால் ஆஹாரம்
கைக்கொள்ளவேண்டுமென்னும் நியமமுடையவனாய்)சரியா மார்க்கமாக,
அந்நகர் - அப்பட்டணத்தை, புக்கான் - அடைந்தான், எ-று. (37)

850. காற்றெதி ரின்றி மண்ணிற் கண்ணுகத் தளவு நோக்கி
    மாற்றினை யெறியும் நூல்வாள் வாய்ப்பிடி நடப்ப தேபோ
    லேற்றநாண் மீனோ டேகும் பிறையென வில்லந் தோறும்
    மாற்றின்வெந் துயரந் தீர மருந்துண்பான் போலப் புக்கான்.

     (இ-ள்.)    (அவ்வாறடைந்தவன்),          காற்றெதிரின்றி -
(சரியாமார்க்கமாகப் போகிறபோது)எதிர்க்காற்று முதலானவையில்லாமல்
பார்த்தும்,மண்ணில்- (அதுவல்லாமலும்) பூமியில், கண் - கண்களினால்,
நுகத்தளவு  - ஒரு நுகத்தடிப் பிரமாணம் (அதாவது : ஒரு வில்தூரம்),
நோக்கி -ஜீவபாதை வராமல் பிரயத்தின பரனாகப்) பார்த்து,மாற்றினை
- ஸம்ஸாரத்தை,  எறியும் - சேதிக்கும்படியான, நூல் - சாஸ்திரோக்த
கிரமத்தால்,வாள்வாய் - வாளாயுதத்தினுடைய வாயின்மேல், பிடி - ஒரு
பெட்டை யானையானது, நடப்பதேபோல் - (மிக ஜாக்