கிரதையாக அல்லது அருமையாக) நடப்பதுபோலவும், ஏற்ற -
இசைந்திராநின்ற, நாண்மீனோடு - அன்றன்றைய நட்சத்திரத்தோடு,
ஏகும் - கிரமஹானியின்றிச் செல்கின்ற, பிறையென -
சந்திரன்போலவும், இல்லந்தோறும் - (வீடு வரிசையாக), ஒவ்வொரு
வீட்டிலும், மாற்றின் - ஸம்ஸாரத்தின், வெம் - வெப்பம் பொருந்திய,
துயரம் - துக்கம், தீர - நீங்க, மருந்து - ஒளஷதத்தை,
உண்பான்போல் - உண்பவனை யொப்ப, புக்கான் - அப்பட்டணத்தின்
வீதியில் நடந்தான், எ-று. (38)
851. ஆயிடைக் கணிகை புத்தி சேனைதன் னகத்தைச் சார்ந்த
மாயமி றவத்தி னானை வந்தெதிர் கொள்ள மற்ற
வேயெனத் திரண்ட தோளாள் விழுமிய தானஞ் செய்தற்
கேயுநற் குலத்துட் டோன்றற் கேதுவென் னிறைவ வென்றாள்.
(இ-ள்.) ஆயிடை - அப்பொழுது, கணிகை - தாசியாகிய,
புத்திசேனை தன் - புத்தி ஷேனையினுடைய, அகத்தை - வீட்டை
(அதாவது : வீட்டிற்கெதிரே தெருவில்), சார்ந்த - அடைந்த, மாயமில்
- மாய்கையில்லாத, தவத்தினானை - தபஸையுடைய அம்முனிவரனை,
மற்று - பின்னை, அ - அந்த, வேயெனத்திரண்ட - பச்சை
மூங்கில்போல் திரட்சியாகிய, தோளாள் - கைகளையுடைய புத்தி
ஷேனையானவள், எதிர்கொள்ள வந்து - எதிர் கொள்ளுதற்கு வந்து,
(அவனை நோக்கி), இறைவ - சுவாமிகளே!, விழுமிய - பெரிதாகிய
(அதாவது : சத் பாத்திரங்களில் செய்யப்படுவதாகிய), தானஞ்செய்தற்கு
- ஆஹாராதி தானங்களைச் செய்வதற்கு, ஏயும் - இசையும்படியான,
நற்குலத்துள் - உத்தமஜாதி வம்சங்களில், தோன்றற்கு - பிறப்பதற்கு,
ஏது - காரணமானது, என் - என்ன, என்றாள் - என்று கேட்டாள்,
எ-று. (39)
852. தன்னைநிந் தித்தல் தக்கோர்ப் பழிச்சுதல் தயாவோ டொன்றி
யின்னுயிர்க் கருளை யீதல் புலைசுதேன் கள்ளின் மீண்டு
மன்னிய குணத்தி னிற்றல் மாயமின் மனத்த ராதல்
பன்னருங் குலத்தைப் பண்ணும் பான்மைக்கு நிமித்த மென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு கேட்டவளை அம்முனிவன் நோக்கி),
தன்னை நிந்தித்தல் - (உண்மையறியாது பிரமத்தமாகி இந்திரியங்களின்
வழியே பந்தகாரணமாய்ச் செல்கின்றனையே என்று அறிந்து) ஆத்ம
நிந்தனை பண்ணி (உதயபாவத்தை வெறுத்து உபசம பரிணாமத்திற்
கூடுதலும், தக்கோர் - ஞானிகளான பரமாத்மர்களை, பழிச்சுதல் -
தத்குணலப்தியார்த்தம்) ஸ்துதிப்பதும், தயாவோடு - ஜீவதயவோடு,
ஒன்றி - பொருந்தி, இன் - இனிமையாகிய, உயிர்க்கு - ஸம்ஸார
ஜீவன்களுக்கு, அருளை - காருண்யத்தை, ஈதல் - கொடுப்பதான
அபயபிரதானமும் (அதாவது : சத்தியானுசாரத்தினால் செய்யும் பிராணி
ஸம்யமமும்), புலைசு - |