நூல்.
6. மணிமுடி கவித்து வேந்தன் மன்னவர் தன்னைச் சூழ
வணியினோ டிருந்த வேபோ லயங்கியங் கடலுந் தீவுந்
தணிவில்சூழ் மேரு வென்னுந் தடமுடி கவித்துச் சம்பூ
வணியினோ டிருந்த தீபத் தரசன தகலத் தம்பொன்.
(இ-ள்.) மணிமுடி
- அழகியகிரீடத்தை, கவித்து - அணிந்து,
வேந்தன் - சக்ரவர்த்தியானவன், மன்னவர் - அநேக
அரசர்கள்,
தன்னைச்சூழ - தன்னைப்படை சூழ்ந்திருப்ப, அணியினோடு
-
அழகோடு, இருந்தவே போல் - (மத்தியில்) இருந்ததைப்போல,
அயங்கியம் - அசங்கியாதமாகிய (அதாவது
கணக்கில்லாத),
கடலுந்தீவும் - சமுத்திரமும் தீபமும், சூழ் - சூழ்ந்த,
தணிவில் -
குறைவில்லாத, மேருவென்னும் - மஹாமேருவென்னும், தடமுடி -
பெரிதான மகுடத்தை, கவித்து - அணிந்து,
அணியினோடு -
அழகுடன், இருந்த - மத்தியில் இராநின்ற, சம்பூ - ஜம்பூவென்னும்
பெயரையுடைய, தீபத்தரசனது - த்வீபராஜனது, அகலத்து - மார்பில்
(அதாவது மத்தியில்), அம்பொன் - அழகிய, எ-று. (6)
(இதுவும்
அடுத்த செய்யுளும் குளகம்)
7. திருவெனத் திகழ்ந்து செம்பொன் மலையினைச் சேர்ந்து தீர்த்த
மருவியே செல்லுங் கந்த மாலினி யென்னு நாடு
விரவிலா விதேகர்க் கென்று முறையுளாய் விதேக நாமம்
மருவிய நாட்டுச் சீதோ தகைவட தடத்தி லுண்டே.
(இ-ள்.) திருவென
- இலக்குமியைப்போல, திகழ்ந்து -
பிரகாசித்து, செம்பொன் மலையினை - சிவந்த பொன் மலையாகிய
மகம்மேரு பர்வதத்தை, சேர்ந்து - சார்ந்து,
தீர்த்தம் - தரும
தீர்த்தமானது, மருவியே - (எக்காலமும் நீங்குதலில்லாமல்) சேர்ந்தே,
செல்லும் - செல்லுகின்ற, கந்தமாலினியென்னும் - கந்தமாலினியென்று
சொல்லும் பெயரையுடைய, நாடு - தேசமானது, விரவு - (சம்சாரத்தில்)
கலத்தல், இலா - இல்லாத (வைராக்கியத்தால் தபசைச்
சேர்ந்த),
விதேகர்க்கு - தேகத்தை நீக்கி முக்தி யடைபவர்க்கு,
என்றும் -
எப்பொழுதும், உறையுளாய் - வாசஸ்தலமாகி, (அதனால்) விதேகம் -
விதேகமென்கிற, நாமம் - பெயரை, மருவிய - சேர்ந்திராநின்ற, நாட்டு
- விதேக க்ஷேத்திரத்து, சீதோதகை -
சீதோதாநதியினுடைய,
வடதடத்தில் - வடகரையில், உண்டு - இரா - நின்றது, எ-று. (7)
நாட்டுச்சிறப்பு
8. ஐஞ்சிறப் பயருந் தேவர் நால்வகைக் குழுவோ டம்பொ
னிஞ்சிசூழ்ந் திலங்கு மேழு நிலத்திறை யிருக்கை வட்ட |