85. கருமத்தின் கீழன கரும நோகமம்
பெரியவா நோகமம் பொறிகொ ளாதன
ஒருபொறி புலத்தன பலபு லத்தன
கருதிய வறுவகைத் கந்த மாகுமே.
(இ-ள்.) கருதிய - கருதப்பட்ட, அறுவகை - ஆறுவிதமாகிய,
கந்தம் - ஸ்கந்தங்கள், (கருமாபேக்ஷையினால்) கருமத்தின் கீழன -
கருமஸ்கந்தத்திற்கு கீழ்ப்பட்டனவும், கருமம் - கருமத்திற்கு
யோக்கியமான ஸ்கந்தம், நோகமம் - நோகருமஸ்கந்தம்,
பெரியவாநோகமம் - பெரியவா நோகருமஸ்கந்தம் என
நான்குவகையும், (இந்திரியாபேக்ஷையினால்), பொறி கொளாதன -
இந்திரியங்களுக்கு விஷயமாகாதவை, பல புலத்தன - பல
இந்திரியங்களுக்கு விஷயமானவை (என மூன்று வகையாகவும்),
ஆம் - ஆகும், எ-று.
ஆறுவகை ஸ்கந்தங்களாவன :
(1) ஸூக்ஷ்மஸூக்ஷ்மம் - இரண்டு பரமாணு கூடினவை முதல்
ஒன்று குறைந்த அனந்த பரமாணுக்கள் கூடினவை வரையில்.
(2) ஸூக்ஷ்மஸ்கந்தம் - அனந்த பரமாணுக்கள் கூடினவை;
இவை கரும ஸ்கந்தமாகும், ஆத்ம குணத்திற்குத் தக்கவாறு
ஆத்மனில்
பந்தித்துக் கருமசரீரத்தை ஆக்கும்.
(3) ஸூக்ஷ்மஸ்தூலஸ்கந்தம் - ரஸம், கந்தம் முதலியவை.
(4) ஸ்தூல ஸூக்ஷ்மம் -தமசாயாதிகள்
(5) ஸ்தூலம் - ஜலதைலாதி.
(6) ஸ்தூலஸ்தூலம் - பூமி பர்வதாதிகள்.
இவைகளில் (1) - கருமத்திற்குக் கீழன.
(2) - கருமஸ்கந்தம்.
(3) & (4) - நோகருமஸ்கந்தங்கள்
(5) & (6) - பெரியவாநோகருமம்.
(1) & (2) - பொறிகொளாதன.
(3) & (4) - ஒரு பொறிபுலத்தன.
(5) & (6) - பல புலத்தன. |