நோக்கிப் புதியவனென்றறிந்து), நாகராகத்தில் - நாகர்களுக்குரிய
பெரிதாகிய மோக வாஞ்சையினால், கெட்டார் - கெடுதியுற்றவர்களின்,
கதைகளை - சரிதங்களை, கலிற்ற - சொல்ல, பின்னும் -
அதன்மேலும், (அவன் உபசமமடையாமல்), வேகராகத்தனாக -
தீவிரமாகிய காமவாஞ்சையை அவள் பேரில் உடையவனாக,
மெல்லியள் - மிருதுவான சரீரத்தையுடைய அக்கணிகையானவள்,
வெறுப்ப - வைராக்கியமடையும் படியாக, சொன்னாள் - அடியில்
வருமாறு சொல்லினாள், எ-று. (44)
857. எலும்புதேர் லீருள் வெண்ணஞ் சூன்குடர் மலங்கண் மூளை
கலந்தநெய்த் தோர் நரம்பு வழுப்பிவை வேறு கண்டால்
விலங்கிமேற் சேர லின்றி வெறுத்துமிழ்ந் துவர்த்துப் போவார்
கலந்திவை கிடந்த குப்பை கண்டுகா முறுவ தென்னோ.
(இ-ள்.) (அவள், சரீரத்தில்), எலும்பு - அஸ்தியும், தோல் -
சருமமும், ஈருள் - ஈரலும், வெண் - வெளுப்பாகிய, நஞ்சு - நஞ்சுக்
கொடிகளும், ஊன் - மாம்ஸமும், குடர் - குடலும், மலங்கள் -
(நவத்துவாரங்களாலும் சரீரத்தாலும் விளையும்) அசுசிசமூகமும், மூளை
- மூளையும், கலந்த - சரீரப்பிரதேசம் முழுதிலும் சேர்ந்திராநின்ற,
நெய்த்தோர் - இரத்தமும், நரம்பு - நரம்புகளும், வழுப்பு -
கொழுப்பும், (ஆகிய), இவை - இவைகளை, வேறு கண்டால் - வேறு
வேறாகப் பிரித்துப் பார்த்தால், (அறிவுடையார்), மேல் - இவைகளின்
மேலே, சேரலின்றி - சேராமல், விலங்கி - (வெகு தூரத்தில்) விலகி,
வெறுத்து - விராகமடைந்து, உமிழ்ந்து - காறியுமிழ்ந்து, உவர்த்து -
அருவருத்து, போவார் - போவார்கள், இவை - இவைகளெல்லாம்,
கலந்து - கூடி, கிடந்த - கிடந்ததாகிய (சரீரமென்னும்), குப்பை -
கும்பலை, கண்டு - பார்த்து, காமுறுவது - ஆசைப்படுவது, என்னோ -
என்ன ஆச்சரியம்!, எ-று. (45)
858. உணர்வொடு வார்த்தை பார்த்த லுவத்தலு முனிவுங் காமத்
துணையிவை தொடர்ந்து நின்றால் தூயவே யாகு மன்றிப்
பிணமிது பிணத்தைச் சேர்ந்தால் பிழைத்ததென் பெரிய வின்ப
மணையுமே லென்னச் சாலச் சுளிந்தவள் வெறுத்துப் போனாள்.
(இ-ள்.) (மேலும்), உணர்வொடு - (அறிவினால் செய்கின்ற
மனோ எண்ணத்தில் ஸ்த்ரீ புமான்கள் உண்டு பண்ணும் காம)
நினைப்பினோடு, வார்த்தை - ஒருவரோடொருவர் சம்பாஷிக்கும்
வார்த்தையும், பார்த்தல் - ஒத்து நோக்குதலும், உவத்தலும்,
சந்தோஷித்தலும், முனிவும் - புலவியென்னும் காமக்கோபமாகிய
ஊடலும், (ஆகிய இவ்வைந்தும்), காமத்துணை - காமசௌக்கியம்
பெறச் சகாயமாகும், இவை - இவைகளை, தொடர்ந்து நின்றால் -
இருவரும் சேர்ந்து நின்றால், (இவைகள் மனமொத்த ஸ்த்ரீ
புருஷர்கட்கு), தூயவேயாகும் - களங்க |