வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 405


 

முதலியவற்றால்,    (வாசனையேற்றி    அலங்கரித்து),    வேய்ந்த -
முடிக்கப்பெற்ற,    கூந்தல்   -  அளகத்தையுடைய, தலையினின்று -
தலையினின்றும்,இழிந்த காலை - நீங்கின காலத்தில், தான் - அதனை
முன்னே உயர்வாக நினைத்துச் சூட்டியவள் தான், துறந்திட்டதேபோல்
- மறுபடி  கொள்ளாமல் அதனை நீக்கிவிடுவதுபோல, (விசித்ரமதியின்)
மலையன - பர்வதம்போல் பெரிதாகிய குணமுடைய, தவத்து வேடம் -
தவ    உருவத்தை,   கண்டு - பார்த்து, முன் - முன்னே, வணங்கி -
நமஸ்கரித்து,    மாண்ட    - பெரிதாகிய,    நிலையினின்று - தபோ
நிலையினின்றும்,  இழிய - (அவன்) நழுவ, பின்னை - பிறகு, நேரிழை
- நேர்மையான  ஆபரணங்களை   யணிந்த புத்தி ஷேணையானவள்,
இகழ்ந்திட்டாள் - இம்முனியை இகழ்ச்சி பண்ணினாள், எ-று.    (52)

865. புகழ்வரம் பாய புத்தி சேனையாந் தோகை தன்னை
    யிகழ்வங் கெழுந்த கோபத் திசைந்தசோ கத்தோ டேகித்
    தகைநெடுங் குழலி னாளைச் சாரலா முபாயந் தேடி
    யகநக ரெங்கும் புக்கா னாவதொன்றிலாமைக் காணா.

     (இ-ள்.)   (அதன்மேல்   அவ்விசித்ரமதி   முனிவன்), புகழ் -
கீர்த்திக்கு,   வரம்பாய   - அணையாகிய (அதாவது : புகழ்கெடாமல்
அணையாய்   நின்று அதனை வளர்க்கக் கூடிய), புத்திசேனையாம் -
புத்திஷேணையாகிய, தோகை - ஆண்மயில் போன்ற சாயலையுடைய
கணிகையானவள்,   தன்னை   -  தன்னை, இகழ - இகழ்ச்சி செய்ய,
அங்கெழுந்த   - அதனால் அம்முனிக்கப்போது உதித்த, கோபத்து -
குரோத  பரிணாமத்தில், இசைந்த - பொருந்திய, சோகத்தோடு - மன
வருத்தத்தோடு, ஏகி - போகி, தகை - அழகையுடைத்தாகிய, நெடும் -
நீண்ட,    குழலினாளை   - அளகத்தையுடைய  அம்மாதை, சாரல் -
சேருதற்கு,   ஆம்    - ஆகின்ற, உபாயம் - தந்திரங்களை, தேடி -
ஆராய்ந்து, அகநகர் - உள் நகரிலே, எங்கும் - எவ்விடங்களிலேயும்,
புக்கான் - புகுந்து பார்த்தவனாகி, (பலரை விசாரித்தும்), ஆவது ஒன்று
- ஆகும்படியான   தன்மை யாதொன்றும், இலாமை - இல்லாமையை,
காணா - கண்டு, எ-று.

     இதுவும், அடுத்த செய்யுளும் குளகம்.                   (53)

866. கடையனப் புரத்து வேந்தன் கந்தமித் திரனென் பானா
    முடல்சுவைத் துண்டு செல்வா னுவப்பதோர் படியி னூனை
    மடையனாய்ச் சமைத்துக் காட்டி மற்றந்த மன்ன னாலத்
    துடியிடை புத்தி சேனை தன்னகந் துன்னினானே.

     (இ-ள்.)  கடையன்   - தர்மாதர்மம் இத்தன்மை யென்றறியாது
தாழ்ந்த   நிலையனும்,   (அதாவது :    ஹேயோபாதேய வியவஹார
நிச்சயமில்லாதவனும்),   உடல்    சுவைத்துண்டு   செல்வான் - பிற
ஜீவன்களின் உடல்களை (அதாவது :