| வைசயந்தன் முத்திச்சருக்கம் | 41 |
Meru Mandirapuranam
|
86. ஊறிரண்டாகி நாற்றம் வண்ணமுஞ் சுவையு மொன்றாய்க்
கூறிரண் டாக்க லாகா நுண்மைத்தா யளவைக் கெல்லாம்
பேறுதன் வழிய தாகிப் பிறங்கிமூ வுலக முற்று
மாறுகந் தங்கட் காதி யாகிய தணுவ தாமே.
(இ-ள்.) அணுவது - (ஸ்நிக்தபரமாணு, ரூக்ஷபரமாணு என்னும்
இரு
வகையான) அணுவானது, ஊறு - அஷ்டஸ்பரிசங்களுள்,
இரண்டாகி -(ஸ்நிக்தபரமாணுவுக்கு ஸ்நிக்த ஸ்பரிசமும் சீதஸ்பரிசமும்,
ரூக்ஷபரமாணுவுக்கு ரூக்ஷஸ்பரிசமும் உஷ்ணஸ்பரிசமுமாக)
இரண்டிரண்டு ஸ்பரிசங்களை யுடையதாகி, (என்றதனால் மற்ற குரு
லகு மிருது கர்க்கச மென்னும் நாலு ஸ்பரிசங்களும்
ஸ்கந்தங்களிடத்தினுள், அணுவுக்கில்லை என்பது பெறப்படும்), நாற்றம்
- சுகந்தம் துர்க்கந்தங்களிலும், வண்ணம் - பஞ்சவர்ணங்களிலும்,
சுவையும் - ஷட்ரஸங்களிலும், ஒன்றாய் - ஒவ்வொன்றை யுடையதாகி
(அதாவது ஒருகந்தம் ஒருரஸம் ஒரு வர்ணத்தையுடையதாகி),
கூறிரண்டாக்கலாகா - கேவலஞானத்துக்கும் இரண்டுகூறுபடுத்த
முடியாத, நுண்மைத்தாய் - ஸூக்ஷ்மமாகி, அளவைக்கெல்லாம் -
(த்ரவிய, க்ஷேத்ர, கால, பாவ) அளவைகளுக்கெல்லாம், பேறு -
பெறற்பாடு, தன் வழியதாகி - தனது வழியாலாகி, மூவுலகம் -
மூன்றுலோகத்தில், முற்றும் - முழுமையும், பிறங்கி - நிறைந்து,
ஆறுகந்தங்கட்கு - முன்சொன்ன ஆறு ஸ்கந்தங்கட்கும், ஆதியாகிய
தாம் - முதலாயிராநின்றதாம், எ-று. (86)
| |
87. கருமநல் லுபசயங் காய நோகமம்
மருவிய புலம்வத்து போகங் காரண
மிருள்வெயி லொளியொலி நிழனாற் பூதமாய்த்
திரிவுடைப் புற்கலந் தான சீவனே.
(இ-ள்.) கருமம் - ஞானாவரணாதி கருமங்களும், நல்லுபசயம்
- நன்றாகிய தாது உபதாதுக்களும், காயம் - ஒளதாரிகாதி
பஞ்சசரீரங்களும், நோகமம் - நோகர் மவர்க்கணைகளும், மருவிய -
சேர்ந்திராநின்ற, புலம் -
பஞ்ச இந்திரியங்களும், வத்து -
இந்திரியவிஷய வஸ்துக்களும், போகம் - போக உபபோக
வஸ்துக்களும், காரணம் - (தர்ம, அர்த்த, காமத்துக்குக்) காரண
வஸ்துக்களும், இருள் - இருட்டும், வெயில் - வெயிலும், ஒளி -
பிரகாசமும், ஒலி - சப்தமும், நிழல் - நிழலும், நாற்பூதமாய் -
(பிருத்திவி, அப்பு, தேயு, வாயு) என்னும் நான்கு பூதங்களுமாய்,
திரிவுடை - (திரவிய, குண, கிரியா) விகாரங்களையுடைய,புற்கலந்தான்
- புத்கலங்கள், அசீவன் - அஜீவனாகும், ( என்றதனால்
ஜீவகுணமிதற்கில்லை என்பது பெறப்பட்டது) எ-று.
|
|
|
|