410மேருமந்தர புராணம்  


 

    முடியுற வணங்கி மூவார் தொழுதெழு வடிவங் கொண்டா
    னிடிமுர சதிர்ந்த தெங்கு மேத்தொலி பரந்த தன்றே.

     (இ-ள்.) (அவ்வாறு சேர்ந்தபின்), இடையறாது - இடைவிடாமல்,
ஏற்ற - இசைந்திராநின்ற, காலத்து - வருஷகாலத்திலே, ஈயும் - மழை
ஜலத்தைக்    கொடுக்கின்ற,    ஓர் -  ஒப்பற்ற, முகிலைப்போலும் -
மேகத்தைப்போல    தானங்     கொடுக்கின்ற, வடிவுடை   - ரூபம்
பொருந்திய,  தடம் - விசாலித்த, கை - கைகளையுடைய, வேந்தன் -
இரத்தினாயுத  மஹாராஜன், வச்சிரதந்தன் - வஜ்ரதந்தமுனிவனுடைய,
பாதம்    -     அடிகளில்,  முடியுற - சிரம் பொருந்த, வணங்கி -
நமஸ்கரித்து,    மூவார்   - தேவர்களும், தொழுதெழும் - வணங்கிச்
செல்லும்படியான,    வடிவம்    -   தபோரூபத்தை    (அதாவது :
ஜினதீக்ஷையை), கொண்டான் - ஏற்றுக்கொண்டான், (அப்போது), இடி
- இடியைப்போல் சப்திக்கின்ற, முரசு - பேரிகையானது, அதிர்ந்தது -
சப்தித்தது,    எங்கும்    -   எவ்விடங்களிலும், ஏத்தொலி - ஸ்துதி
செய்கின்ற    சப்தமானது,    பரந்தது    -   மிகுதியாகப் பரவிற்று,
எ-று.                                                 (62)

875. வரையினை யுருக்கும் வச்சி ராயுதன் றுறந்த வந்நா
    ளரதன மாலை மைந்தன் காதலா லகத்தி ருந்தா
    ளுரையினுக் கரிய வண்ணம் மகனொடுந் துறந்திட் டுள்ளம்
    புரையெலா நீங்கி நின்று புற்கலம் வருந்த நோற்றாள்.

     (இ-ள்.) வரையினை    - பர்வதத்தை, உருக்கும் - கெடுக்கும்
(அதாவது :   கல்லையும்  உடைக்கின்ற சக்தியுள்ள), வச்சிராயுதன் -
வஜ்ராயுத மஹாராஜன்,    துறந்த  - தீக்ஷித்த, அந்நாள் - அப்போது,
மைந்தன் காதலால்    -     புத்திரனாகிய இரத்தினாயுதன் மேலுள்ள
ஆசையால்,   அகத்து - வீட்டிலேயே, இருந்தாள் - இருந்தவளாகிய,
அரதனமாலை - (வஜ்ஜிராயுதன் மனைவியாகிய) இரத்தினமாலை, (மேற்
கூறியபடி  இரத்தினாயுதன்    துறவடைந்தபோது),    உரையினுக்கு -
சொல்வதற்கு, அரிய - அரிதாகிய,வண்ணம் - விதமாக, மகனொடும் -
தன் புத்திரனாகிய   அந்த இரத்தினாயுதனுடனே, துறந்திட்டு - தானும்
ஆரியாங்கனைக்குரிய   தீக்ஷையைக்     கைக்கொண்டு,  உள்ளம் -
மனதினால்,     புரையெலாம்   - குற்றங்களெல்லாம், நீங்கி நின்று -
விலகும்படியாகப் பிராயச்சித்த விதியின்படி பாவித்து நின்று,புற்கலம் -
சரீரம்,   வருந்த    - க்ரசமாகும்படி, நோற்றாள் - அனசனாதிகளைப்
பொருந்தி நோன்புகளை நோற்றாள், எ-று.

     ‘வரையினையுருக்கும்" என்றது வஜ்ஜிராயுதத்திற்கடை.      (63)

876. கச்சணி முலையி னார்பாற் காதல்போற் றவத்தின் கண்ணும்
    மெச்சிய மனத்த னாகி வெயினிலை யாதி யோகின்