பச்சுதி யின்றி நின்று காலங்கள் பலவு நோற்றிட்
டச்சுத கற்பம் புக்கா னரதன மாலை யோடும்.
(இ-ள்.) (அதன்மேல் இரத்தினாயுதன்), கச்சு - இரவிக்கையை,
அணி - அணிந்திராநின்ற, முலையினார்பால் - ஸ்த்ரீமார்களிடத்தில்,
காதல்போல் -முன்தனக்கிருந்த போகவாஞ்சையைப்போல (அதாவது :
அது எப்படி அதிகரித்திருந்ததோ அவ்விதமாகவே பிறகு), தவத்தின்
கண்ணும் - தபஸினிடத்திலும், மெச்சிய - மிகுதியாக விரும்பிய,
மனத்தனாகி - மனமுடையவனாகி, வெயினிலையாதி யோகின் -
ஆதபயோக முதலான திரிகாலயோகங்களில், பச்சுதியின்றி -
நழுவுதலில்லாமல், நின்று - நிலைபெற்று, காலங்கள் பலவும் -
ஆயுஷ்ய நாள் வரையிலும் அநேக காலங்கள், நோற்றிட்டு -
தபஞ்செய்து, அரதனமாலையோடும் - தனது தாயாகிய இரத்தின
மாலையென்னும் ஆரியாங்கனையோடும் (ஆயுரவஸான காலத்து),
அச்சுதகற்பம் - அச்சுத கல்பத்தை, புக்கான் - அடைந்தான்,
எ-று. (64)
877. இருபத்தீ ராழி காலத் திருபத்தீ ராயி ரத்தாண்
டொருவித்தா மமுத முண்ணா வும்பரின் பத்தை யுற்றார்
மருவித்தான் யோகி னின்றான் வச்சிரா யுதனும் பின்னை
நரகத்தாழ்ந் தரவின் செய்கை நவிற்றுவன் நாகர் கோவே.
(இ-ள்.) நாகர்கோவே - தரணேந்திரனே!, (அவ்வாறு அச்சுத
கல்பத்தையடைந்த அவ்விருவர்களும்), இருபத்தீராழி காலத்து -
இருபத்திரண்டு கடற்காலமாகிய ஆயுஷ்யத்தை யுடைத்தான,
இருபத்தீராயிரத்தாண்டு - இருபத்திரண்டாயிரம வருஷங்களை, ஒருவி
- நீங்கி (அதாவது : அவ்வளவு காலஞ்சென்று), அமுதை -
தேவாமிர்தத்தை, உண்ணா - மனதினால் புசித்தவர்களாகி, உம்பரின்
பத்தை - (இப்படிப்பட்ட) தேவசுகத்தை, உற்றார் - அடைந்தார்கள்,
வச்சிராயுதனும் - வஜ்ராயுத மஹாமுனியும், தான் - தானென்னும்
ஆத்ம ஸ்வரூப பாவனையில், மருவி - சேர்ந்து, யோகின் -
யோகத்தில், நின்றான் - நிலைபெற்றான், பின்னை - பிறகு,
நரகத்தாழ்ந்த - முன் சொன்ன நாலா நரகத்தில் மூழ்கிய, அரவின்
செய்கை - மலைப்பாம்பினது காரியத்தை, நவிற்றுவன் - இனிச்
சொல்லுவேன், எ-று.
தாம் - அசை. ‘தாழ்ந்த அரவின்" என்பது, ‘தாழ்ந்தாவின்" எனத்
தொகுத்தலாயிற்று. (65)
878, பருமித்த கடல்கள் பங்கப் பிரபையிற் பத்தும் பெற்று
நரகத்தி னரிதிற் போந்து நால்வகை யாழி காலந்
திரததா வரத்திற் சென்று தீயவாந் துயர முற்றுப்
பரதத்திற் கச்சை யென்னும் புரத்தின்பால் வேட னானான். |